பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் பள்ளிகளில் உறுதிமொழி ஏற்க உத்தரவு (உறுதிமொழி இணைப்பு) - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் பள்ளிகளில் உறுதிமொழி ஏற்க உத்தரவு (உறுதிமொழி இணைப்பு)

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் பள்ளிகளில் உறுதிமொழி ஏற்க உத்தரவு 

மாநில பெண் குழந்தைகள் பாது காப்பு தினமான இன்று (பிப்.24) அனைத்து பள்ளிகளி லும் மாணவர்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெ.ஜெய லலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதியை ஆண்டுதோறும் மாநில பெண் குழந்தைகள் பாது காப்பு தினமாக கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 
அதன்படி அனைத்து வகை பள்ளிகளிலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு வலியுறுத்தி இன்று (பிப்.24) மனித சங்கிலி, பேரணி, உறுதிமொழி ஏற்பு, கருத்தரங்கம் உட்பட நிகழ்ச்சிகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட் டுள்ளது. 

இதுதவிர பள்ளிகளில் மாணவ, மாணவிகள் எடுக்க வேண்டிய உறுதிமொழி விவரம்: 


✹ இந்திய குடி மகனாகிய நான் சாதி, மதம், இனம், மொழி, சமூக, பொருளாதார பாகுபாடு இல்லாமல் எல்லா குழந்தைகளையும் சமமாக நடத்துவேன். 

✹ எனது செயல்பாடுகளால் எந்த வொரு குழந்தையையும் உடல்ரீதி யாகவும், மனரீதியாகவும் பாதிக் காத வகையில் கவனமுடன் நடந்து கொள்வேன். 

✹ எனது கவனத்துக்கு வரும் குழந்தைகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் வன்முறைகள் மற்றும் எந்த ஒரு பாதிப்புகளை தடுப்பதற்கான  முழு முயற்சியில் ஈடுபடுவேன். மேலும் இதனை உரிய அதிகாரிகளின் கவனத்திற்று  கொண்டுசெல்வேன்.

✹ இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என உணர்ந்து அவர்கள் வளர்ச்சி மற்றும் பாது காப்புக்கு என்னால் இயன்ற பங்களிப்பை அளிப்பேன்.

 ✹ குழந்தை திருமணம் பற்றிய தகவல் தெரிந்தால் அதை தடுத்து நிறுத்த எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுவேன். 

✹ நான் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்க உறுதுணை யாக இருப்பேன். 

✹ இந்திய அரசி யலமைப்பு சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தை கள் உரிமைகள் மீதான உடன்படிக் கையின்படி அனைத்து குழந்தை களுக்கும் அவர்களின் உரிமை கள் கிடைக்கும் வகையில் செயல்படுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அனைத்து குழந்தைகளுக்கும் அவர்களின் உரிமைகள் கிடைக்கும் வகையில் செயல்படுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன்.

Girl Child Protection Day ordered to take oath in schools

The school education department has ordered all students to take a pledge today (Feb. 24), the state day for girls' protection. The Tamil Nadu government has decided to celebrate the birth anniversary of late Chief Minister J Jayalalithaa on February 24 as the State Girl Child Protection Day.

Accordingly, the Department of Education has ordered the conduct of the human chain, rally, pledge affiliation and seminar today (Feb. 24) to emphasize the safety of girls in all schools. In addition to this, the pledge of the pupils to take in the schools:

✹ As an Indian citizen, I will treat all children equally, regardless of caste, creed, race, language, social or economic discrimination.

 ✹ By my actions, I will treat any child physically and mentally and physically.

✹ The threats against children that come to my attention are violence and I will do my utmost to prevent any harm. And I will bring this to the attention of the relevant authorities.

✹ I will make my contribution to the development and safeguarding of the children of tomorrow the realization that they are the leaders of tomorrow.

 ✹ If I find out about child marriage, I will make every effort to stop it.

✹ I will be committed to creating a child-free society.

✹ I pledge to work in accordance with the Government of India Act and the United Nations Convention on the Rights of the Child. I assure you that I will work to ensure that all children have their rights.

No comments:

Post a Comment

Please Comment