நாசா விண்வெளி மையத்துக்கு செல்லும்
நாமக்கல் மாணவி அபிநயாவுக்கு ரூ.2 லட்சம்
முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
நாசா விண்வெளி மையத்துக்கு செல்லும் நாமக்கல் மாணவி அபிநயாவுக்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
அமெரிக்கா மற்றும் சென்னை யில் உள்ளi தனியார் நிறுவனங்கள் இணைந்து, நாடு முழுவதும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு இணையதளம் வாயிலாக அறிவி யல் தேர்வை நடத்தின.
இந்த தேர்வில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவரின் மகளான 9-வது படித்து வரும் அபிநயா பங்கேற்று, தேர்வில் வெற்றி பெற்று, நாசா விண்வெளி மையத்துக்குச் செல்ல உள்ளார். இந்த செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். மாணவி அபிநயா அமெரிக்கா வில் உள்ள நாசா விண்வெளி மையத்துக்குச் செல்லவும்,
சர்வ தேச விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்கவும் வாய்ப்பு கிடைத்தது அவரது திறமைக்கு கிடைத்த வெற்றியாகும். விண் வெளித் துறையில் அதிக ஆர்வம் கொண்ட அபிநயா, கல்வியில் சிறந்து விளங்கவும், விண்வெளித் துறையில் இதுபோன்று பற்பல சாதனைகள் படைத்து தமிழகத் துக்கும்,
இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் மன தார வாழ்த்துகிறேன்.
நாசா சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்குச் செல்லும் சாதனையை பாராட்டியும்i வருங் கால இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கவும் அபிநயாவுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும்.
Chief Minister Palanisamy announces Rs 2 lakhs for Abhinaya, Namakkal student to NASA space center
Chief Minister Palanisamy has announced that Abhinaya, a Namakkal student, will be awarded Rs. In a statement he made yesterday, private companies in the US and Chennai jointly conducted an online interview for students and students studying from 6th to 2nd Plus.
Abhinaya, a 9th daughter of Venkatasalam from Namakkal district, participated in the exam, passed the exam, and is to go to the NASA Space Center. I'm glad to hear this news.
The student Abhinaya had the opportunity to go to the NASA Space Center in the United States and attend the International Space Science Conference. Abhinaya, who has a keen interest in outer space, is very proud of her academic achievement and her achievements in the aerospace industry.
Abhinaya will be awarded Rs 2 lakh from CM's General Relief Fund to commemorate the achievements of NASA International Space Station and to encourage younger generations.
No comments:
Post a Comment
Please Comment