அரசு தொடக்கப்பள்ளிக்கு வருகை தந்த சச்சின் டெண்டுல்கர்
காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் ஊராட்சியிலுள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வருகை தந்து மாணவ, மாணவிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் ஊராட்சியில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் தனியார் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு பூங்காவினை பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வருகை தந்து பார்வையிட்டார்.
முன்னதாக மாணவ, மாணவிகள் வரவேற்பு பதாகைகளை ஏந்தியவாறு சச்சின் டெண்டுல்கரை உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுடனும், தனியார் நிறுவன ஊழியர்களுடனும் சச்சின் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
Sachin Tendulkar attending Government Primary School
Sachin Tendulkar, a famous cricketer, visited the Government Elementary School at Vallam Parachchi in Kanchipuram district. More than 50 students are studying in Government Primary School in Kanjipuram District Vallam Panchayat. Cricketer Sachin Tendulkar visited the sports park set up on behalf of a private company. Earlier, students and students greeted Sachin Tendulkar as they carried welcome banners. Tendulkar regularly took photographs with schoolchildren, students and private company employees.

No comments:
Post a Comment
Please Comment