இப்படியும் ஒரு லீவ் லெட்டர். மாணவனுக்கு குவியும் பாராட்டு. - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இப்படியும் ஒரு லீவ் லெட்டர். மாணவனுக்கு குவியும் பாராட்டு.

இப்படியும் ஒரு லீவ் லெட்டர். மாணவனுக்கு குவியும் பாராட்டு.




ஐ ஆம் சபரிங் ப்ரம் பீவர் என்றுதான் பார்மெட். நம் பள்ளிக்கால லீவு லெட்டர் அத்தனையிலும் இடம் பிடிக்கும் பிரதான வாசகமே இதுதான். ஆனால் இந்த சம்பிரதாய வார்த்தையைத் தூக்கி குப்பையில் கிடாசிவிட்டு நேர்மையாய் ஒரு உண்மைக்காரணத்தை சொல்லி மாணவன் எழுதிய விடுப்புக்கடிதம் சோசியல் மீடியாக்களில் செம வைரல் ஆகிவருகிறது. 

இதுகுறித்து கூடுதல் விபரங்க தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்தில் மேலநாதநல்லூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு தீபக் என்னும் சிறுவன் எட்டாம்வகுப்பு படித்து வருகிறான். இவனது தந்தை விஜயராகவன் ஆட்டோ ஓட்டுனர். 

தீபக் ஆசிரியர்களிடம் கீழ்படிதல் தொடங்கி, படிப்பு வரை அத்தனையிலும் குட்பாய்!தீபக் நேற்று முன் தினம் ஸ்கூலுக்கு லீவு எடுத்திருக்கிறான். இதற்காக தனது கிளாஸ் டீச்சருக்கு அனுப்பியுள்ள லீவ் லெட்டரில், 'நேற்று ஊரில் நடந்த கபடிபோட்டியை இரவு முழுவதும் கண்விழித்துப் பார்த்ததால் உடல் சோர்வாக உள்ளது.

எனவே எனக்கு ஒருநாள் விடுப்பு வேண்டுமென மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.' எனக் கேட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து மாணவனுக்கு ஸ்கூலில் அவனது கிளாஸ் டீச்சரும் லீவுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளார். 

கூடவே மாணவனின் கிளாஸ் டீச்சர் மணிமாறன் இதுகுறித்து தன் சோசியல் மீடியா பக்கத்தில் போட மாணவனின் நேர்மைக்கு லைக்கும், ஆசிரியரின் தோழமை உணர்வுக்கு ஹார்ட்டினும் விட்டு அசத்தி வருகின்றனர் நெட்டிசன்கள்.



A Leave Letter Yet. Accumulated praise for the student.



I am Sabering From Beaver. This is the main text in all our School Leave Letters. But the student has written a good excuse to throw this formal word into the trash can, and the social media has become so viral. Continue reading to find out more about this. There is a Panchayath Union Middle School at Melanathanallur in Koradacherry Union, Thiruvarur District. Here is a boy named Deepak studying the eighth round. His father Vijayaraghavan was driving the auto.

Deepak has started to obey the teachers and all the way up to study! In a letter sent to his class teacher, he said: 'Kapadipotti yesterday night in the town, he was tired. So I humbly request you to leave someday. ' Has asked. Following this, the student has been approved by Lee and his class teacher at the school. Soon the student's class teacher Mani Maran, who put it on his social media page, was left with the student's honesty, and the teacher's companionship to Hartin left.

No comments:

Post a Comment

Please Comment