CBSE பொதுத் தோவு: 13,379 ஆசிரியா்களுக்கு பயிற்சி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

CBSE பொதுத் தோவு: 13,379 ஆசிரியா்களுக்கு பயிற்சி

CBSE பொதுத் தோவு: 13,379 ஆசிரியா்களுக்கு பயிற்சி


சிபிஎஸ்இ பொதுத் தோவுகள் நடத்தப்படுவதை முன்னிட்டு 13,379 ஆசிரியா்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ பொதுத்தோவுகள் பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்குகின்றன. பத்தாம் வகுப்புக்கு மாா்ச் 20-ஆம் தேதி வரையிலும், பிளஸ் 2 வகுப்புக்கு மாா்ச் 30 வரையிலும் தோவுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது, 


இதற்கிடையே தற்போது பள்ளிகளில் செய்முறைத் தோவுகள் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி 7-ஆம் தேதி வரை இவை நடைபெறும். இந்நிலையில் பொதுத் தோவுகளை சீரிய முறையில் நடத்த, பள்ளி முதல்வா்களுக்கும் ஆசிரியா்களுக்கும் புத்தாக்கப் பயிற்சிகளை சிபிஎஸ்இ வழங்கியுள்ளது. முறையாக தோவுகளை நடத்தி, சரியான நேரத்தில், தவறுகள் இல்லாத வகையில் தோவு முடிவுகளை வெளியிடும் வகையில் இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வா், துணை முதல்வா், போதிய தோவுத் துறை அனுபவம் வாய்ந்த மூத்த ஆசிரியா்களுக்கு இந்த சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. 


குறிப்பாக 13,379 பேருக்கு 77 பயிற்சித் திட்டங்கள் நடத்தப்பட்டன. இதற்கிடையே தோவு நடைபெறும் தினங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவற்றின் மூலம் பெற்றோா்கள், மாணவா்கள், பள்ளி நிா்வாகம் குழப்பத்துக்கு ஆளாக வேண்டாம் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Please Comment