NASA செல்லும் நாமக்கல் மாணவி., 9-ம் வகுப்பில் அசத்தல் செயல்- என்ன செய்தார் தெரியுமா? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

NASA செல்லும் நாமக்கல் மாணவி., 9-ம் வகுப்பில் அசத்தல் செயல்- என்ன செய்தார் தெரியுமா?

NASA செல்லும் நாமக்கல் மாணவி., 9-ம் வகுப்பில் அசத்தல் செயல்- என்ன செய்தார் தெரியுமா?

நாசா செல்வதற்கான தேர்வை எழுதுவதி வெற்றி பெற்று நாசா செல்லும் பழக்கம் மாணவர்களிடையே வளர்ந்து கொண்டே வருகிறது. சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையைச் சேர்ந்த கருப்பையா- அழகுவள்ளி தம்பதியின் மகள் ஜெயலட்சுமி நாசா செல்லும் வாய்ப்பை பெற்றார். இவர் புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

முன்னதாக நாசா சென்ற மாணவி இவர் கடந்த அக்டோபர் மாதம் நாசா விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிடும் வாய்ப்பை உலகளாவிய கணினிப் போட்டியில் பங்கேற்றுப் பெற்றார். இந்த போட்டியில் உலகம் முழுவதும் இருந்து 30 ஆயிரம் பேர் பங்கேற்றனர். 

இதில் ஜெயலட்சுமி பங்கேற்று நாசா செல்வதற்கான வாய்ப்பை பெற்றார்.தேர்வு விவரம் குறித்து மாணவி இந்த தேர்வில் பங்கேற்ற விவரம் குறித்து மாணவி ஜெயலட்சுமி கூறுகையில், நான் பள்ளியில் உணவு இடைவேளையில் நண்பர்களோடு அமர்ந்து சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன். அப்போது கீழே தண்ணீரில் ஒரு செய்தித் தாள் துண்டு இருந்தது. அதை எடுத்துப் பார்த்தேன். அதில் மதுரைச் சேர்ந்த மாணவி நாசா செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார் என குறிப்பிடப்பட்டிருந்தது நாசா செல்வதற்கான ஆன்லைன் தேர்வு அந்த செய்தித் தாளிலேயே அவர் நாசா செல்வதற்கான தேர்வு எழுதிய ஆன்லைன் லிங்கும் இருந்தது. இதையடுத்து அதை பயன்படுத்தி நான் தேர்வு எழுதி நாசா செல்வதற்கான வாய்ப்பை பெற்றேன் என்றார்.

மதுரை மாணவி தான்யா தஷ்னம் அந்த செய்தி தாளில் குறிப்பிட்டிருந்த மாணவி பெயர் தான்யா தஷ்னம். மதுரையை அடுத்த கள்ளந்திரியைச் சேர்ந்தவர் ஜாபர் உசேன். அந்தப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் தான்யா தஷ்னம் (வயது 15). இவர் மதுரையில் உள்ள மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயார் சிக்கந்தர் ஜாபர், அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

www.go4guru.com என்ற வலைதளம் தான்யா தஷ்னம் அறிவியல் பாடத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். அவருக்கு பிடித்த பாடமும் அறிவியல் என்பதால் www.go4guru.com என்ற வலைதளம் மூலம் நடத்தப்படும் சர்வதேச விண்வெளி அறிவியல் போட்டியில் கலந்து கொண்டார்.

 இந்த போட்டியில் வெற்றி பெற்று நாசா செல்லும் வாய்ப்பை பெற்றார்.தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் தேர்வு இந்த நிலையில் தற்போது அமெரிக்கா மற்றும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்கள் இணைந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு இணையம் வாயிலாக நடத்திய அறிவியல் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி அபிநயா வெற்றி பெற்றார். 

இதையடுத்து, அவர் நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல உள்ளார்.மாணவி அபிநயாவின் சாதனையை பாராட்டிய முதல்வர் மாணவி அபிநயாவின் சாதனையை பாராட்டியும், வருங்கால இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் விதமாகவும் அவருக்கு ₹2 லட்சம் நிதியினை பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அவர் கல்வியில் சிறந்து விளங்கவும், விண்வெளித்துறையில் சாதனைகள் படைக்க வாழ்த்துவதாகவும் நனது அறிக்கையில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment