*•┈┈•🌿 _DAILYNEWS 24/7_🌿•┈┈•*
_*✍️⚡மார்ச் 31-ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 11 மற்றும் 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 7-ம் தேதி அன்று நடைபெறும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.*_
இதனால் திட்டமிட்டப்படி ஏப்ரல் 24-ம் தேதி 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
கொரோனோ நோய் பரவலை தடுக்கும் வகையில் வரும் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
இதனால் 26-ம் தேதி நடைபெற இருந்த 11-ம் வகுப்பிற்கான கடைசி தேர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 15-க்கு பின் துவங்கும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் 11 மற்றும் 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இம்மாதம் 31-ம் தேதிக்கு பதில் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதனால் ஏப்ரல் 24-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே 14-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட 11-ம் வகுப்பு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகாது.
12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்ப்பட்டால் மருத்துவம் ,பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை தள்ளிப்போகும் என்பது குறிப்பிடத்தக்கது.
┈┉┅━•• 🌿👨🏻💻🌷👩🏻💻 🌿••━┅┉┈
No comments:
Post a Comment
Please Comment