வரும் 14-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வரும் 14-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 14-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் என ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். 

 இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், அரசு கலைக் கல்லூரி சார்பில் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்பை பெற்றுத் தரும் நோக்கத்துடன் முகாம் நடத்தப்படுகிறது. 

இதில், 25-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற் கின்றன. 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையும், ஐடிஐ, பாலிடெக்னிக், பிஇ மற்றும் நர்சிங் கல்வி தகுதி உள்ளவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். பாஸ்போர்ட் அளவு உள்ள 4 புகைப்படங்கள், ரேஷன் அட்டை, ஜாதிச் சான்றிதழ் மற்றும் கல்வி சான்றிதழ் நகலுடன் முகாமில் கலந்துகொள்ள வேண்டும். www.ncs.gov.in என்ற இணையதள முகவரியில் வேலை தேடுபவர்கள் பகுதியில் திருவண்ணாமலை மாவட்டத்தை தேர்வு செய்து ‘ஆன்லைன்' மூலம் பதிவு செய்து கொள்ளலாம். 


தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்துi செய்யப்படாது. அரசு துறைகளுக்கு அவர்களது பதிவு மூப்பு அடிப்படையில், அரசுப் பணிக்கு பரிந்துரை செய்யப்படும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் 04175 - 233381 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment