தலைமை ஆசிரியர்கள் அரசு பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - CEO - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தலைமை ஆசிரியர்கள் அரசு பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - CEO

தலைமை ஆசிரியர்கள் அரசு பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - CEO 



அரசு பொறியியல் கல்லூரிகளில் சேர பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்தார். வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான விழிப்புணர் வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. 

பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான இந்தக் கூட்டத்துக்கு கல்லூரி துணை முதல்வர் ரகீலாபிலால் தலைமை தாங்கினார். இணை பேராசிரியர் பிரவீன்ராஜ், மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 

 இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் பங்கேற்றுப் பேசும்போது, ‘‘தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்து படிக்க அதிக கட்டணம் செலவாகிறது. ஆனால், அங்கு மாணவர்கள் பலர் சேர்ந்து படிக்கின்றனர். 

அங்கு கல்வி சார்ந்த அடிப்படை வசதிகள் இருக்கிறதா? என மாணவர்கள் சரியாக விசாரிப்பதில்லை. எனவே, பிளஸ்2 தேர்வு எழுதும் மாணவர்களிடம் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அரசு பொறியியல் கல்லூரிகளில் சேர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

பொறியியல் மாணவர் சேர்க்கைக்காக மாநிலம் முழுவதும் 51 பொறியியல் மாணவர் சேர்க்கை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, வேலூரில் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, வாலாஜாவில் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, ஜோலார் பேட்டையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த மையங்கள் செயல்படும். இங்கு சென்று மாணவர்கள் விண்ணப்பிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

No comments:

Post a Comment

Please Comment