மார்ச் 23,
வரலாற்றில் இன்று.
விடுதலைப் போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்ட தினம் இன்று(1931).
ஆங்கிலேய அரசை எதிர்த்து போராடிய மகாராஷ்டிரவைச் சேர்ந்த இவர்கள் இந்துஸ்தான் சோஷலிசக் குடியரசு அமைப்பு என்ற இயக்கத்தைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் ஆவர்.
லாலா லஜபதி ராயை ஆங்கிலேய அரசின் காவல்துறையினர் அடித்துக் கொன்றமைக்குப் பழி வாங்க, பகத் சிங், சுக்தேவ், ராஜகுரு மூவரும் ஆங்கிலேயக் காவல்துறை அதிகாரி ஜெ. பி. சாண்டர்சை கொலை செய்தனர்.
காவல் துறை அதிகாரியைக் கொன்ற வழக்கில், ஆங்கிலேய அரசின் நீதிமன்றம், ராஜகுரு, பகத்சிங் மற்றும் சுகதேவ் மூவருக்கும் விதித்த தூக்கு தண்டனை தீர்ப்பின்படி, அவர்களுக்கு மார்ச் 23, 1931ஆம் நாளில், இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான உசைனி வாலா கிராமத்தில், தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
எவரும் அறியாமல் இருப்பதற்காக சிறைக்கு பின் பக்கமாக கடத்தப்பட்டு 50 மைல் தொலைவிலுள்ள சட்லஜ் ஆற்றாங்கரையில் எரியூட்டப்பட்டனர்.
தூக்குத்தண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குத்தண்டனை அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்தி கையொப்பம் இட்டார். தி லெஜன்ட் ஆஃப் பகத்சிங் என்ற இந்தி திரைப்படத்தில் இந்தத் தண்டனைக்கான ஒப்பீட்டு பத்திரத்தில்(காந்தி இர்வின் பேக்ட்) கையெழுத்திட்டதற்காக காந்தியை மக்கள் கடுமையாக விமர்சிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அஹிம்சையைப் பின்பற்றுபவர் எப்படி இம்சை தரும் தூக்குத்தண்டனைக்கு ஒப்புதல் அளிக்கலாம் என்பது போல கருத்துகள் மக்களால் பேசப்பட்டது.
No comments:
Post a Comment
Please Comment