மார்ச் 23, வரலாற்றில் இன்று.
அகிரா குரோசாவா பிறந்த தினம் இன்று.
அகிரா குரோசாவா (23 மார்ச், 1910 - 6 செப்டம்பர், 1998) உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குனராவார்.
1943 ஆம் ஆண்டு வெளியான சன்ஷிரோ சுகடா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
1993 ஆம் ஆண்டு தனது இறுதிப்படைப்பான மடடாயோ திரைப்படத்தினை இயக்கிய அகிரா குரோசாவா வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருதினையும், பிரெஞ்சு விருதான லீஜியன் டி ஹானர் விருதினையும் பெற்றவரென்பது குறிப்பிடத்தக்கது.
1950 ஆம் வருடம் அகிரா குரோசோவா தனது ரஷோமான் திரைப்படத்தை வெளியிட்டார். பல விருதுகளையும் சர்வதேச திரைப்பட விழா மேடைகளையும் தனதாக்கி கொண்ட இத்திரைப்படத்தை ஜப்பானில் பார்த்த ஏவிஎம் மெய்யப்பன் அவர்கள் இதேபோன்ற போன்ற கதைகளம் கொண்ட திரைப்படத்தை தமிழில் உருவாக்க எண்ணினார்.
"கொலையும் செய்வாள் பத்தினி" என்ற பழமொழியை கருவாக கையில் எடுத்துக்கொண்டு கதையை எழுதினார் வீணை S பாலச்சந்தர். அதற்கு திரைக்கதை அமைத்தார் ஜாவர் சீதாராமன். 1954 ஆம் ஆண்டு வீணை S பாலச்சந்தரின் இயக்கத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பில் உருவானது "அந்த நாள்" திரைப்படம். பாட்டுக்களையே பலமாக கொண்டு தமிழ் திரைப்படங்கள் இயங்கி வந்த காலகட்டத்தில் ஒரு பாட்டு கூட இல்லாமல் வெளிவந்து வெற்றி கண்ட முதல் திரைப்படமும் இதுவே.
No comments:
Post a Comment
Please Comment