+1 தமிழ் தேர்வு: ஒரு மதிப்பெண் வினா கடினம் மாணவர்கள் கருத்து
சிவகங்கை:பிளஸ் 1 மாணவர்களுக்கு நேற்று துவங்கிய தமிழ் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் புத்தகத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 1 மாணவர்களுக்கான அரசு பொது தேர்வு நேற்று துவங்கியது. பிளஸ் 1 தேர்வில் 164 பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 609 மாணவர், 9 ஆயிரத்து 123 மாணவிகள் என 16 ஆயிரத்து 734 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
72 தேர்வு மையங்களில் நேற்று நடந்த தமிழ் தேர்வில் 7ஆயிரத்து 93 மாணவர், 8 ஆயிரத்து 839 மாணவிகள் என 15 ஆயிரத்து 932 பேர் பங்கேற்றனர். இதில் 516 மாணவர், 286 மாணவிகள் என 802 பேர் பங்கேற்கவில்லை.
தேர்வு மைய கண்காணிப்பு: மாவட்ட அளவில் சிவகங்கை, தேவகோட்டை, திருப்புத்துார் ஆகிய 3 கல்வி மாவட்ட அளவில் 1040 தேர்வு அறை கண்காணிப்பாளர்கள்,
90 பேர் அடங்கிய குழுவினர் நிலையான பறக்கும் படை, ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினர் நரேஷ், முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் அமுதா, காஞ்சனா, சண்முகநாதன் ஆகியோர் அடங்கிய பறக்கும் படை அதிகாரிகள் தேர்வினை கண்காணித்தனர்.
சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலை பள்ளி தேர்வு மையத்தில் கண் குறைபாடுள்ள மாணவர்கள் 4 பேருக்கு, தனியாக ஆசிரியர்கள் நியமித்து, மாணவர்கள் விடை தெரிவிக்க, ஆசிரியர்கள் தேர்வு எழுதினர்.
புத்தகத்தில் இருந்து வினாக்கள்: நேற்று நடந்த தமிழ் தேர்வில் 14 ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு மாணவர்கள் விடை அளிக்க வேண்டும். இந்த வினாக்கள் அனைத்தும் புத்தகத்தில் இருந்து நேரடியாக கேட்கப்படாமல்,
உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டதால், ஒரு மதிப்பெண்களுக்கு விடை அளிப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டதாகவும், மற்ற வினாக்கள் அனைத்தும் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
+1 Tamil Examination: Difficulty students to score a score
Sivaganga: Students who have been asked for the examinations of the Tamil exams, which started yesterday for Plus 1 students, have been asked from inside the book. 7 thousand 609 students from 164 schools and 9 thousand 123 students from 164 schools applied for the Class 1 exam. 7 thousand 93 students, 8 thousand 839 students, 15 thousand 932 participated in the Tamil examination held yesterday in 72 examination centers. 802 out of 516 students and 286 students are not participating.
Naresh, Chief Education Officer Palumuttu, District Education Officers Amutha, Kanchana and Shanmuganathan were among the 90 members on board to monitor the selection. Teachers appoint, student Questions from the book: Students should answer a score of 14 in the Tamil examination held yesterday. Students said that all these questions were not asked directly from the book, but from the inside, there was some difficulty in answering the scores and all the other questions were simple.

No comments:
Post a Comment
Please Comment