" பெண்ணியம் விருதுகள் 2020 "
சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக மாநில அளவிலான பெண்ணியம் விருதுகள் 2020 என்னும் விருது வழங்கும் விழா 10.03.2020 அன்று நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான போட்டி தேர்வில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல கல்லூரியை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர்.
இது தவிர தனிதிறமைகளின் அடிப்படையிலும் விருதுகள் வழங்கப்பட்டது. 10.03.2020 அன்று திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரி வளாகத்தில் இந்த மாபெரும் விருது வழங்கும் விழா தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு மற்றும் கே.எஸ்.ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் இணைந்து நடத்தியது.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மாண்புமிகு முன்னாள் இந்திய தலைமை நீதிபதி மற்றும் கேரளா ஆளுநர் திரு.சதாசிவம் ஐயா அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டி விருது வழங்கினார் . சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கலந்துகொண்ட அனைத்து மாணவிகளுக்கும் பங்கேற்பாளர் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்சியில் கே.எஸ்.ஆர் மகளிர் கல்லூரி முதல்வர் திரு.கார்த்திகேயன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் திரு.சதாசிவம் அவர்கள் "பெண்கள் பாதுகாப்பிற்கான சட்டங்கள் பற்றியும்,மாணவிகளுக்கு சமூக விழிப்புணர்வு"
பற்றியும் சிறப்புரையாற்றினார்கள்.தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் திரு.ராஜ்குமார் அவர்கள் ஏற்புரை வழங்கினார். இறுதியாக தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு செயலாளர் திரு.மகேந்திரன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
இவ்விழாவில் கே.எஸ்.ஆர் மகளிர் கல்லூரியை சேர்ந்த 1500 க்கும் மேற்ப்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர் இராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவி பிரியதர்ஷினி அவர்கள் முதலிடமும் , பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவி நிவேதா இரண்டாம் இடமும்,
கே.எஸ்.ஆர் மகளிர் கல்லூரியை சேர்ந்த மாணவி சவிதா மூன்றாம் இடமும் , ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவி நொபியா பேகம் நான்காம் இடமும் பெற்று " பெண்ணியம் விருதுகள் 2020 " என்ற விருதை பெற்றனர்.
ரத்தினம் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் அமுதாதேவி சிறந்த கல்விப் பணியை பாராட்டி "பெண்ணியம் விருதுகள்" வழங்கப்பட்டது. மேலும், கே.எஸ்.ஆர் மகளிர் கல்லூரி சார்பில் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு நிர்வாக குழு கூறுகையில் " பெண்ணியம் விருதுகள் 2020 " என்னும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. மேலும் இப்போட்டி தேர்வில் கலந்து கொண்ட அனைத்து கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் & நன்றிகள்.
இத்தேர்வை ஒருங்கிணைத்த அனைத்து பேராசிரியர்களுக்கும் நன்றிகள். பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள், மாணவிகள் , பெற்றோர்கள் , கல்லூரி முதல்வர்கள் மற்றும் வாய்ப்பு வழங்கிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றிகள்.
இந்த நிகழ்ச்சிக்கு வாய்ப்பு வழங்கிய கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் அரிமா டாக்டர் கே.எஸ்..ரங்கசாமி அவர்களுக்கும்,துணைத் தலைவர் திரு.ர.சீனிவாசன் அவர்களுக்கும் & கே.எஸ்.ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர்.மா.கார்த்திகேயன் அவர்களுக்கும் அவர்களுக்கும் நன்றிகள்.
மேலும் 2021 க்கான விருது வழங்கும் விழா பற்றி கூடுதல் தகவல்கள் விரைவில் தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு https://tsfofficial.webnode.in/ இணையதளத்தில் வெளியிடப்படும். இனிவரும் விருது வழங்கும் நிகழ்வில் பல கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விருது பெற வாழ்த்துகிறோம். நன்றி ... தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு தலைமை குழு
No comments:
Post a Comment
Please Comment