ஏப்ரல் 21 முதல் கோடை விடுமுறை: விரைந்து பாடங்களை முடிக்க ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
சென்னை: ஏப்ரல் 21 முதல் கோடை விடுமுறை விடப்பட உள்ளதால் அனைத்து வகுப்புகளுக்கும் பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும் என பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 2, பிளஸ் 1-க்கு மார்ச் 4ல் பொதுத் தேர்வுகள் துவங்கின.
பத்தாம் வகுப்புக்கு வரும் 27-ல் தேர்வு துவங்க உள்ளது. இந்த பொதுத் தேர்வுகள் அனைத்தும் ஏப்ரல் 13ல் முடிவுக்கு வருகின்றன. இதற்கிடையே ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத் தேர்வுகளை ஏப்ரல் 1 முதல் 20ம் தேதிக்குள் விரைந்து முடிக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
ஏப். 21 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் கோடை விடுமுறை விடவும் தீர்மானித்துள்ளது. அதற்கேற்ப பாடங்களை விரைந்து நடத்தி மாவட்ட அளவில் நடத்தப்படும் மூன்றாம் பருவத் தேர்வுகளை விரைந்து முடிக்க வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் ஏப்.30 வரை பள்ளிக்கு வர வேண்டும். மே மாத இறுதியில் பள்ளி வகுப்பறை , பள்ளி வளாகம் துாய்மையாக இருப்பதை , ஆசிரியர்கள் உறுதிப்படுத்தி செல்லவும் பள்ளி கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
Summer vacation from April 21: School department directs teachers to speed up lessons
Chennai: Education departments have ordered schools to close all classes as soon as the summer holidays begin on April 21. General exams started on March 2 for Tamil Nadu's Plus 2 exam March 2 and Plus 1. Selection for the 10th grade is scheduled to begin on the 27th. All of these general exams end on April 13. Meanwhile, the school education department plans to expedite third-grade exams for grades one through nine through April 1 to 20.
Feed. The summer holidays for all classes from 21 have been decided. Primary education officials have been ordered to expedite the courses and complete the district-level third-level exams. Teachers must come to school until April 30. By the end of May, the school education department has advised teachers to ensure that the classroom and school premises are in good shape.
No comments:
Post a Comment
Please Comment