பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வு சுலபம்: மாணவ, மாணவியர் மகிழ்ச்சி
திருப்பூர்:பிளஸ் 2 மாணவர்களுக்கான கணினி அறிவியல், கணினி பயன்பாடு உள்ளிட்ட தேர்வுகள் சுலபமாக இருந்ததாக மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2 முதல் நடந்து வருகிறது.
நேற்று கணினி அறிவியல், உயிரி வேதியியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், மனை அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடந்தன. திருப்பூரில் மாவட்டத்தில் கணினி அறிவியல் - 4 ஆயிரத்து, 413 பேரும்,
கணினி பயன்பாடு - 8 ஆயிரத்து, 811 பேரும், உயிரி வேதியியல் - 30 பேரும், அரசியல் அறிவியல் - 38 பேரும், புள்ளியியல் - 778 பேரும், மனை அறிவியல் - 133 பேரும் எழுதினர்.
மேலும் கணினி அறிவியலில் - 184 பேரும், கணினி பயன்பாட்டில் - 416 பேரும், புள்ளியியல் - 115 பேரும் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். தனித்தேர்வர்களில், 94 பேர் எழுதினர். வினாத்தாள் குறித்து மாணவர்கள் கூறியதாவது:
அபினா (மைக்ரோ கிட்ஸ் பள்ளி): கணினி பயன்பாடு தேர்வில் நிறைய கேள்விகள் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக கேட்கப்பட்டிருந்தன. இருந்தாலும் பதிலளிக்கும் வகையில் இருந்தது. எல்லோரும், 'பாஸ்' ஆகிவிடலாம்.
பேபி ஷாலினி, (ஜெய்வாபாய் பள்ளி): கணினி அறிவியல் தேர்வு வினாத்தாள் சுலபமாக இருந்தது.
ஒரு மதிப்பெண்களில் ஓரிரு கேள்விகள் கஷ்டமாக இருந்தது. மற்றபடி நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு ஈஸிதான்.
புவனா (ஜெய்வாபாய் பள்ளி): மனை அறிவியல் தேர்வை பொருத்தவரை எதிர்பார்த்த கேள்விகள் வந்திருந்தன. நுண்ணறிவை சோதிக்கும் கேள்விகள் அதிகளவில் இடம்பெற்றிருந்தன. நல்ல மதிப்பெண் நிச்சயம் வரும்.
ரஞ்சனி, (ஜெய்வாபாய் பள்ளி): கணினி அறிவியல் தேர்வு எதிர்பார்த்ததை விட எளிதாகவே கேள்விகள் வந்திருந்தன. திருப்புதல் தேர்வு கைக்கொடுத்ததால் தேர்வை உரிய நேரத்தில் முடிக்க முடிந்தது. நல்ல மதிப்பெண் பெறுவேன்.
Plus 2 computer science exams are easy: student, student happiness
Tirupur: Students have expressed their enthusiasm for exams, including computer science and computer applications for Plus Two students. Yesterday, exams for Computer Science, Biochemistry, Political Science, Statistics and Land Science were held. Computer science - 4 thousand, 413, Computer use - 8 thousand, 811, Biochemistry - 30, Political science - 38, Statistics - 778, Land science - 133.
There are also 184 people in computer science, 416 in computer use, and 115 in statistics. Of the soloists, 94 wrote. Regarding the questionnaire, the students said: Abina (Micro Kids School): A lot of questions in the computer application test were asked indirectly. It was responsive though. Folks, that could be the ‘Boss’.
Baby Shalini, (Jaiwabai School): The Computer Science Exam Questionnaire was easy. One of the questions was the difficulty of the questions. Others are well-educated students. Questions to test intelligence were plentiful. Ranjani, (Jaivabai School): Computer science exams were easier than expected. The choice of redirection enabled the selection to be completed in a timely manner. I get a good score.
No comments:
Post a Comment
Please Comment