5 ஆண்டு ஆனர்ஸ் சட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை
நுழைவுத்தேர்வுக்கு மார்ச் 31-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு
திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு ஆனர்ஸ் சட்டப் படிப்பு மற்றும் ஓராண்டு கால முதுநிலை சட்டப் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுக்கு மார்ச் 31-க் குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் திருச்சியில் இயங்கி வருகிறது. இங்கு 5 ஆண்டு கால பிஏ., எல்எல்பி (ஆனர்ஸ்), பிகாம்., எல்எல்பி (ஆனர்ஸ்) ஆகிய இளங்கலை சட்டப் படிப்புகளும்,
எல்எல்.எம் (நிறுவன சட்டம்), எல்எல்.எம் (அறிவுசார் சொத்துரிமை), எல்எல்.எம் (இயற்கை வளங்கள்) ஆகிய முதுகலை சட்டப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
பல்வேறு நிதி உதவிகள்
இதற்கான மாணவர் சேர்க்கை பெங்களூரு தேசிய சட்டப் பல் கலைக்கழகங்களின் கூட்டமைப்பு நடத்தும் நுழைவுத்தேர்வு மூலம் நடைபெறுகிறது.
இங்கு சேரு வோருக்கு தமிழக அரசின் முதல் தலைமுறை பட்டதாரி உதவித்தொகை, ஆதி திராவிடர் நலத்துறை வழங்கும் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித் தொகைகள் கிடைக்கும்
இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு (2020-2021) மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை தமிழ் நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகம் நேற்று வெளியிட்டது.
அதன்படி, மேற்கண்ட சட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் நுழைவுத்தேர்வுக்கு www.consortiumofnlus.ac.in என்ற இணையதளத்தில் மார்ச் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
படிப்பு, கல்விக்கட்டணம், உதவித்தொகை தொடர்பான விவரங்களை www.tnnlu.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Please Comment