வங்கிக் கடன் தவணை செலுத்த 6 மாத அவகாசம்
ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
கரோனா வைரஸால் வர்த்தகம் பாதித்துள்ள நிலையில் வங்கி களிடம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வாங்கிய கடனுக்கான தவணையைச் செலுத்த குறைந்தபட்சம் 6 மாத கால அவகாசம் வழங்கவேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கரோனா வைரஸ் காரணமாக விவசாயம், கல்வி, தொழில், வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலை யில் வங்கிகளில் கடன் வாங்கி தொழில் செய்பவர்களிடம் வட்டிக் கான மாத தவணையை செலுத்த கட்டாயப்படுத்தக்கூடாது.
வட்டித் தவணை செலுத்த முடியாதவர்களுக்கு குறைந்தபட் சம் 6 மாத கால அவகாசம் அளித்து அதன்பிறகு வசூல் செய்ய வேண்டு்ம்.
இன்றைய சூழ லில் கரோனா வைரஸ் தடுப் புக்காக எடுக்கப்பட்டுள்ள நட வடிக்கைகளால் அனைத்து தரப்பு மக்களும் பாதுகாக்கப்பட்டாலும், பொருளாதாரத்தை ஈட்ட முடியா மல் சிரமப்படுவதைக் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் மேற்கண்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Please Comment