‘டியூஷன், சிறப்பு வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட் டுள்ளது. இந்நிலையில் பள்ளி களுக்கு தொடர் விடு முறை அளிக்கப்பட்டுள்ளதால் தனிப்பயிற்சி மையங்கள் மூலம் தனியார் பள்ளிகள் பொதுத் தேர்வு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்துவதாகவும் ஆசிரியர்கள் தங்கள் வீடு களில் டியூஷன் வகுப்புகளை எடுப்ப தாகவும் புகார்கள் வந்துள்ளன.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் வழியாக அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவில், ‘‘மாணவர்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கவே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகளை நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதைமீறி வீடுகள் மற்றும் தனியார் பயிற்சி மையங்களில் ஆசிரியர்கள் சிலர் சிறப்பு வகுப்புகளை எடுத்து வருகின்றனர்.
இவ்வாறு அரசின் ஆணைக்கு புறம்பாக மாணவர்களை திரட்டுவது தவறாகும். இத்தகைய செயல் களில் ஈடுபடும் ஆசிரியர்களின் விவரங்களை திரட்டி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் இயக்குநரகத்திடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள்மீது துறைரீதி யாக ஒழுங்கு நடவடிக்கை எடுக் கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Please Comment