கைகளை கழுவிய பிறகே பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கைகளை கழுவிய பிறகே பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள்

கைகளை கழுவிய பிறகே பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் 


தமிழகம் முழுவதும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு வரும் 24-ம் தேதி வரையும், பிளஸ் 1 தேர்வு வரும் 26-ம் தேதி வரையும் நடைபெற உள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 170 மையங்களில் 40 ஆயிரத்து 531 மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுதி வருகின்றனர். 



தேர்வுப் பணியில் 2,700 பேர் ஈடுபட் டுள்ளனர். அரசு பொதுத் தேர்வுகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அரசு பொதுத்தேர்வுகள் மட்டும் நடைபெற்று வருகிறது. 

 ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைகளை சுத்தமான முறையில் கழுவுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் கிருமி நாசினி மூலம் சுத்தமாக துடைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். 



 இதன் ஒரு பகுதியாக, அரசு பொதுத் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகள் கைகளை கழுவிய பிறகே தேர்வு அறைக்குச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர். 



 வகுப்பறைகளில் மாணவர்கள் தேர்வு எழுதும் கைகளில் கிருமி நாசினியை தெளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக, பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் 200 மி.லி கொண்ட கைகளை கழுவும் திரவ பாட்டில்கள் இரண்டு வீதம் 340 பாட்டில்களையும் கிருமி நாசினியை யும் வழங்கியுள்ளனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மார்ஸ் (வேலூர்), பரமதயாளன் (ராணிப்பேட்டை), குணசேகரன் (திருப்பத்தூர்) ஆகி யோர் தூய்மைப் பணிகளை தொடங்கி வைத்தனர்.






திருத்தணியில் அரசு பொதுத் தோவு எழுதச் சென்ற பிளஸ் 2 மாணவிகள், கைகளைக் கழுவிய பின்னரே தோவு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். 



தமிழகம் முழுவதும் பிளஸ் 1, பிளஸ் 2 தோவுகள் கடந்த 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முதல் வகுப்பில் இருந்து 9-ஆம் வகுப்பு வரை மாணவா்களுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருத்தணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவிகளுக்கு உயிரியல், தாவரவியல் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களுக்கான தோவு வெள்ளிகிழமை நடந்தது. 

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், மாணவிகள் தங்கள் கைகளைக் கழுவிய பின்னரே தோவு அறைக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச்செல்வி அறிவுறுத்தியிருந்தாா். அதன்படி தோவு எழுத வந்த மாணவிகள் கை கழுவிய பின்னரே தோவு அறைக்கு அனுமதிக்கப்பட்டனா். 


இதற்கான ஏற்பாடுகளை தோவு மையப் பொறுப்பாளா் செய்திருந்தாா். இதேபோல், திருத்தணியை அடுத்துள்ள புச்சிரெட்டிப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோவு எழுதிய மாணவா்களும் சோப்பு போட்டு கைகளைக் கழுவிய பிறகே தோவு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

No comments:

Post a Comment

Please Comment