அரசு மருத்துவக் கல்லூரிகளில்
தமிழக மாணவர்களுக்கு 85% இடம்
நாமக்கல்லில் முதல்வர் பழனிசாமி உறுதி
தமிழக மருத்துவக் கல்லூரிகளில் 85 சதவீத இடங்கள் தமிழக மாண வர்களுக்கும், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடுக்கும் வழங் கப்படுகிறது. ஆனால், வெளி மாநிலத்தைச் சேர்ந்தோர் தமிழகத் தில் மருத்துவக் கல்வி பயில்கின் றனர் என்ற தவறான செய்தியை எதிர்க்கட்சித் தலைவர் பரப்பி வரு கிறார் என்று முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையொட்டி 25 ஏக்கர் பரப்பளவில் ரூ.338.76 கோடி மதிப் பில் அமையவுள்ள புதிய அரசு மருத் துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
புதிய அரசு மருத்துவக் கல்லூரி உட்பட ரூ.1,167.21 கோடி மதிப்பில் 8 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டி பேசியதாவது:
தமிழகத்தில் தான் அதிகளவில் மருத்துவக் கல்லூரிகள் இருக்கின் றன. முதல்வராக ஜெயலலிதா இருக்கும்போது 6 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தார். தற்போது ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழ கத்துக்கு பெற்றுத்தரப்பட்டுள்ளது.
2011-ம் ஆண்டு வரை தமிழகத் தில் ஆண்டுக்கு 1,945 பேர்தான் மருத்துவக் கல்வி படித்து வந்த னர். தமிழக முதல்வராக ஜெய லலிதா வந்தபோது 835 பேர் கூடுத லாக மருத்துவக் கல்வி பயில நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு 350 இடங்கள் கூடுதலாக மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்று மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர்க்கப்பட்டனர்.
தற்போது 11 மருத்துவக் கல்லூரிகள் கொடுக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் கூடுதலாக 1,650 மாணவர்கள் புதிதாக மருத் துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தவறான பிரச்சாரம்
மருத்துவக் கல்லூரிகளில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தோர் தமிழகத்துக்கு வந்து மருத்துவக் கல்வி பயில்கின்றனர் என்ற தவறான செய்தியை எதிர்க்கட்சித் தலைவர் பரப்பி வருகிறார். மருத் துவக் கல்வியில் 100 சதவீதத் தில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீடுக்காக வழங்கப்படு கிறது.
மீதியுள்ள 85 சதவீத இடங்களில் தமிழக மாணவர் கள் தான் படிக்கின்றனர். 15 சதவீதம் அகில இந்திய இட ஒதுக்கீடு என்றாலும் அதிலும் நமது மாணவர் கள் போட்டியிட்டு மருத்துவம் பயிலலாம்.
கோதாவரி-காவிரி இணைக்கும் திட்டத்தை ஒரு கனவுத் திட்டமாக அரசு எடுத்துக் கொண்டுள்ளது. இந்த திட்டம் நூற்றுக்கு நூறு சதவீதம் நிறைவேற்றப்படும். இதன் மூலம் தமிழகம் தண்ணீர் பிரச்சினை இல்லாத மாநிலமாக மாற நட வடிக்கை எடுக்கப்படும் என்றார்.
விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட் டன, 33,141 பயனாளிகளுக்கு ரூ.134.37 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேசினார்.
மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே சிறப்புரையாற்றினார்.
அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்கள் நல் வாழ்வு செயலர் பீலா ராஜேஷ், மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கரூரில் கட்டிடம் திறப்பு
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவமனை கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
கரூர் காந்தி கிராமத் தில் உள்ள கல்லூரி வளாகத்தில் ரூ.155.80 கோடியில் கட்டப்பட்டு உள்ள புதிய மருத்துவமனை கட்டி டம், கலையரங்கம், பணியாளர்கள் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

No comments:
Post a Comment
Please Comment