ராணுவ ஆட்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ராணுவ ஆட்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

ராணுவ ஆட்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் 

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் நடை பெற உள்ள ராணுவ ஆட்தேர்வு முகாமில் பங்கேற்க இணைய தளம் மூலம் இன்று (1-ம் தேதி) முதல் வரும் 31-ம் தேதி வரை விண்ணப் பிக்கலாம் என ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், “ராணுவ பணிக்கு ஆட்தேர்வு செய்யும் முகாம் தி.மலை அருணை பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஏப்ரல் 15 முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 


சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப் பத்தூர், தி.மலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய 11 மாவட்டம் மற்றும் புதுச்சேரி iமாநிலத்தைச் சேர்ந்த பதினேழரை வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம். 01-10-2020-ம் தேதியை கொண்டு வயது கணக்கிடப்படும். சிப்பாய் தொழில்நுட்பம், சிப்பாய் நர்சிங் உதவியாளர், சிப்பாய் நர்சிங் உதவியாளர் கால்நடை, சிப்பாய் எழுத்தர், ஸ்டோர் கீப்பர் தொழில்நுட்பம், சிப்பாய் பொதுப் பணி, சிப்பாய் வர்த்தகர் ஆகிய பணி யிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது


. www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் மார்ச் 1-ம் தேதி (இன்று) முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முகாமில் பங்கேற்க, மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு இணையதளம் மூலம் அனுமதி அட்டை வழங்கப்படும். அதனை பதிவிறக்கம் செய்து, எடுத்துக் கொண்டு முகாம் நடைபெறும் இடத்துக்கு வர வேண்டும். இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். ராணுவ ஆட்சேர்ப்பு செயல்முறை முழுமையாக தானியங்கி செயல்பாடாகும். 



இதில் தகுதி பெறுபவர்கள் பொது நுழைவுத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். ராணுவ ஆட்சேர்ப்பு செயல்முறை முழுமையாக தானியங்கி செயல்பாடாகும். இதில் தகுதி பெறுபவர்கள் பொது நுழைவுத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

No comments:

Post a Comment

Please Comment