Public Exam கண்காணிப்பு பணி
மாவட்டங்கள் வாரியாக இயக்குநர்கள் நியமனம்
பொதுத்தேர்வு கண்காணிப்பு பணிக்காக மாவட்டவாரியாக துறை இயக்குநர்களை நிய மித்து பள்ளிக்கல்வித் துறை செயலாளர் உத்தரவிட்டுள் ளார்.
தமிழக பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நாளை (மார்ச் 2) தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்நிலையில் பொதுத்தேர்வு பணிகளை கண் காணிக்க மாவட்டவாரியாக அதி காரிகளை நியமனம் செய்து பள்ளிக்கல்வித் துறை செயலா ளர் தீரஜ் குமார் அரசாணை வெளியிட்டுள்ளார்.
அதன்விவரம் வருமாறு:
சென்னை மாவட்ட தேர்வு கண்காணிப்பு அதிகாரி களாக தேர்வுத்துறை இயக்கு நர் உஷாராணி, தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் திருவளர் செல்வி ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.
இதுதவிர காஞ்சிபுரம், செங் கல்பட்டு மாவட்டங்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் கண் ணப்பன், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மெட்ரிக் பள்ளி கள் இயக்குநர் கருப்பசாமி, பெரம்பலுார், அரியலுார் மாவட்டங் களுக்கு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் பழனிசாமி உள்ளிட்டோர் கண்காணிப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளனர்.
இதேபோல், இதர மாவட் டங்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்ந்த இயக்குநர் கள் மற்றும் துணை இயக்குநர் கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment
Please Comment