11-ந்தேதி முதல் நடைபெற இருந்த
வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு
ஊதிய உயர்வு, வாரத்தில் 5 நாள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்கள் போராடி வருகின்றன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 11-ந்தேதி முதல் 3 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பும் வெளியிட்டு இருந்தன. வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய மன்றம் சார்பில் இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இதனால் வங்கிப்பணிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து ஊழியர் சங்கங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதால் இந்த 3 நாள் வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்படுவதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஊழியர் சங்கங்களுடன்,
இந்திய வங்கிகள் சங்கம் நடத்திய இருதரப்பு பேச்சுவார்த்தையில் நேர்மறையான முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக 15 சதவீத ஊதிய உயர்வு மற்றும் வாரத்தில் 5 நாள் வேலை போன்ற கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மற்றi கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டு இருக்கிறது. எனவே இந்த வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டு உள்ளது.


No comments:
Post a Comment
Please Comment