தினம் ஒரு தகவல் கொரோனா : அறிகுறியை திறம்பட கையாண்டவர்
இந்த பீதியான சூழ்நிலையில், கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள இரிட்டியை சேர்ந்த ஷாகிர் சுபான், வெளிநாடுகளிலிருந்து திரும்புபவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகி இருக்கிறார்.
பயண ஆர்வலரான ஷாகிர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், உலக நாடுகள் பலவற்றுக்கும் மோட்டார் சைக்கிளில் தனியாகப் பயணம் செய்பவர். சில மாதங்களுக்கு முன் தனியாக உலகம் முழுவதும் அவர் தனது இருசக்கர வாகனத்தில் சுற்றும் பயணத்தை தொடங்கினார் ஷாகிர். ஜனவரி 28-ந்தேதி அன்று ஈரானை அடைந்த அவர், பிப்ரவரி 16-ந் தேதி வரை அங்கேயே தங்கினார்.
இந்தக் காலகட்டத்தில் தான் ஈரானில் கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவியது. ஈரான் எல்லைகள் பலவும் மூடப்பட்டன. அஜெர்பைஜானுக்குச் செல்லும் எல்லை மட்டும் மூடப்படாமல் இருந்தது. எனவே அங்கிருந்து அஜெர்பைஜானுக்குச் சென்றிருக்கிறார். அங்கிருந்து ஜார்ஜியா செல்ல முயன்ற போது தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறார். ஈரானில் இவர் பயணித்த நாட்களில் தான் அங்கே கொரோனா தீவிரமாக பரவியிருக்கிறது.
இவர் தனது ஹெல்மெட், கிளவுஸ், ஜாக்கெட் ஆகியவற்றை அணிந்திருந்தாலும் இவர் ஈரானில் கடந்து சென்ற பகுதிகளில் ஏராளமானவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே தனது பயணத்தைக் கைவிட்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு, அஜெர்பைஜான் தலைநகர் பாகூவில் உள்ள தனது நண்பரின் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கிறார்.
அங்கு ஓர் அறையில் தனிமையில் இருந்த போது 4 நாட்கள் கழித்து கடுமையான ஜலதோஷம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது பாகூவில் மட்டும் 5 பேருக்கு கொரோனா வந்திருப்பது உறுதியான தகவல் இவரை அடைந்தது. உடனடியாக தாய்நாடு திரும்ப முடிவெடுத்தார். அந்த அவசரத்திலும் அரிதான பொருட்களாகி விட்ட முகக்கவசங்களையும் கிருமிநாசினிகளையும் வாங்கிக்கொண்டு மார்ச் 5-ந்தேதி அன்று விமானத்தில் ஏறியவர், துபாய் வழியாக கண்ணூர் விமான நிலையத்தை வந்தடைந்தார்.
துபாய் விமான நிலையத்தில் இடை நின்ற போது கூடுமானவரை மற்றவர்களிடமிருந்து விலகியே இருந்திருக்கிறார். அத்துடன் விமானத்தில் தன் அருகில் அமர்ந்திருந்தவர்களையும் தன் இருக்கைக்கு அருகில் வந்து சென்றவர்களையும் மொபைலில் படம் எடுத்திருக்கிறார். தனக்கு ஒருவேளை கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானால் இவர்களைத் தேடி கண்டுபிடித்து சோதனை செய்ய உதவியாக இருக்கும் என்று சமயோசிதமாக இதைச் செய்திருக்கிறார். கண்ணூர் விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் தனது பயண விவரங்களை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
உடனடியாக ஆம்புலன்சில் கண்ணூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டார். மொபைல் போன், லேப்டாப், கேமரா தவிர தான் சுமந்து சென்ற மற்ற பொருட்கள் அனைத்தையும் பாகூவிலேயே அப்புறப்படுத்திவிட்டார் ஷாகிர். அதோடு தன்னை வரவேற்க யாரும் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என்றும் நேரடியாகத் தானே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளப் போவதாகவும் தன் குடும்பத்தினருக்கு தெரிவித்துவிட்டார்.
அத்துடன் இவரது ரத்தம், உடல் திரவ மாதிரிகளை எடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகிவிட்டது. மார்ச் 8-ந்தேதி அன்று மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார். கொரோனாவைக் கண்டு பயப்படாதீர்கள். தன்னம்பிக்கையுடன் இருங்கள்.
உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் கரோனா நம்மை எதுவும் செய்யாது என்கிறார், 30 வயதாகும் ஷாகிர். இவர் தனக்கு கொரோனா அறிகுறி உருவானது முதல் நேர்ந்த அனுபவங்களை தகவல்களாக மற்றவர்களும் தெரிந்துகொள்ளும் வகையில் வெளியிட்டு இருக்கிறார். அவரது முயற்சிக்கு பாராட்டுகளும் கிடைத்துள்ளன.

No comments:
Post a Comment
Please Comment