வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்
ஆலோசனை பெற மன நல ஆலோசகர்கள் நியமனம்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் ஆலோசனை பெற மன நல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மனநல ஆலோசகர்கள்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் மன ரீதியிலான ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்க, அவர்களை தொடர்பு கொண்டு அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்க மன நல ஆலோசகர்கள், மாவட்ட தலைமையகங்களில் அமைக்கப்பட்டுள்ள அவசர கால உதவி மையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தங்களுக்கு ஏற்படும் மன ரீதியிலான பிரச்சினைகளை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான அறிவுரைகளும், ஆலோசனைகளும் பெறுவதற்காக கூடுதலாக மன நல ஆலோசகர்கள் தனியாகவும் பணியில் உள்ளனர்.
தொலைபேசி எண்கள்
அதன்படி அந்தந்த மாவட்டங்களில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான ஆலோசனைகளை பெறலாம்.

No comments:
Post a Comment
Please Comment