அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எவ்வளவு: உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழக பள்ளி கல்வித்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்ற விபரத்தை அரசு தரப்பில் தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.கரூர் தாந்தோனிமலை மகேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனு: ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் சில மேல்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அப்பொறுப்பை முதுகலை ஆசிரியர்கள் கூடுதலாக கவனிக்கின்றனர்.
பணிச்சுமை அதிகரித்துள்ளது.சில ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பொறுப்பை மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் கூடுதலாக கவனிக்கின்றனர். ஆசிரியர் மற்றும் அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கிறது. ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனு செய்தார்.நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.அரசு தரப்பில்,&' ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் என பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணிமூப்பு (சீனியாரிட்டி) நிர்ணயிக்க வேண்டியுள்ளது. உபரி ஆசிரியர்கள் எந்தெந்த பள்ளிகளுக்கு செல்ல விரும்புகின்றனர் என கருத்தறிய வேண்டியுள்ளது.
இதற்கு கால அவகாசம் தேவைப்படும்,&' என தெரிவிக்கப்பட்டது.நீதிபதிகள், &'பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்ற விபரத்தை அரசு தரப்பில் மார்ச் 19ல் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்,&' என்றனர்.

No comments:
Post a Comment
Please Comment