கொரோனா விழிப்புணர்வு மொபைல் தானியங்கி தகவல்களை மாநில மொழிகளில் வழங்குங்கள்! கனிமொழி
டெல்லி:
கொரோனா விழிப்புணர்வு குறித்து மொபைல் போனில் வழங்கப்படும் தானியங்கி தகவல்களை மாநில மொழிகளில் வழங்குங்கள் என்று மத்திய சகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தனுக்கு திமுக எம்.பி. கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் இந்தியாவிலும் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 39 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், தமிழகத்திலும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஏற்பாடுகள் செய்யுமாறு சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வேண்டுகோள்விடுத்தது,
'அழைப்புக்கு முந்தைய அறிவிப்பாக மூன்று நாட்களுக்கு நாங்கள் உருவாக்கிய 30 விநாடி ஆடியோவைப் பயன்படுத்துமாறு தொலைத் தொடர்பு நிறுவனங்களைக் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
தொலைதொடர்பு நிறுவனங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எளிமையான 'செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை' குறித்தவைரஸ் விழிப்புணர்வை மொத்தஎஸ்எம்எஸ் / புஷ் அறிவிப்பை அனுப்புமாறுகேட்கப்படலாம்,
இதற்காக MyGovவுடன் ஒத்துழைப்பு கருதப்படலாம், 'என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, இந்திய தொலைதொடர்பு நிறுவனங்கள் மொபைல் ஃபோன் ரிங்டோன்களை 'கொரோனா வைரஸ்' பற்றிய விழிப்புணர்வை பரப்பும் இயல்புநிலைஅழைப்பாளர் ட்யூன்களாக (default caller tunes) மாற்றிஉள்ளன.
பார்திஏர்டெல், பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடாபோன்-ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் சனிக்கிழமைமுதல் தங்கள் ரிங்டோன்களை மாற்றி உள்ளது.
அதன்படி, இருமல் சத்தத்துடன் தொடங்கி, நாம் எதை 'செய்யவேண்டும் எதை செய்யக்கூடாது' என்றவிழிப்புணர்வை கூறும்.
குறிப்பாக தொடர்ந்து இருமல் அல்லது தும்மும்போது ஒருவரின் முகத்தை மூடுவது, சோப்பு அல்லது அதிக ஆல்கஹால் உள்ளடக்கம்கொண்ட சானிடிசர் மூலம் கைகளை சரியாக சுத்தம் செய்வது பற்றி கூறுகிறது.
'ஏர்டெல்தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கொண்ட ringback tones-களை DoT வழிகாட்டுதல்களின்படி வெளியிடத் தொடங்கியுள்ளது,'
இந்த தகவல்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருப்பதால் சாமானிய மக்கள் புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்படுகிறது.
இதையறிந்த திமுக எம்.பி. கனிமொழி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கொரோனா வைரஸ் விழிப்புணர்வு தகவல்களை வரவேற்பதாகவும்,
அதே வேளையில், இந்தியா பல மொழிகளை கொண்ட நாடு என்பதால், கொரோனா விழிப்புணர்களை தகவல்களை மாநில மொழிகளில் அளிக்க ஏற்பாடு செய்யுங்கள், அந்தந்த பிராந்திய மொழிகளிலும் இருப்பதைக் கருத்தில் கொண்டால் இன்னும் பலனளிக்கும் என்று வலியுறுத்தி உள்ளார்.
Provide Corona Awareness Mobile Automatic Information in State Languages! Kanimozhi
New Delhi: The DMK MP has asked Union Minister of State for Health, Dr Harshavardhan, to provide automated information on mobile phones in the state. Kanimozhi has appealed. The coronavirus is also spreading in India and threatening people. So far, 39 people have been confirmed by Corona, while in Tamil Nadu one person has been infected with Corona and has been hospitalized. In this context, the Ministry of Health and Family Welfare has requested to make arrangements to raise awareness of the coronavirus, saying: 'The telecommunication companies have been asked to use the 30-second audio we made three days before the call.
Telecommunication companies may be asked to send a total SMS / Push notification to all customers on simple 'Do's and Don'ts', in collaboration with MyGov, "the Ministry of Health said. Subsequently, Indian telecommunications companies have converted mobile phone ringtones into default caller tunes to spread awareness of the coronavirus. Companies including Bharti Airtel, BSNL, Reliance Jio and Vodafone-Idea have changed their ringtones since Saturday. Accordingly, we begin with the coughing noise and tell the definition of what we should and should not do. Closing one's face, especially when constantly coughing or sneezing, is about cleaning your hands with soap or a sanitizer that contains too much alcohol.
"Airtel has begun to release Corona virus-aware ringback tones to all its customers, according to DoT guidelines," and this information is mostly in English, making it difficult for ordinary people to understand. DMK MP Kanimozhi has brought to the notice of Union Health Minister Harshavardhan. In his letter to the Union Minister, he said that the coronavirus would welcome the virus alert, while urging that India be a multi-lingual country, organize the corona alerts to provide information in the official languages of the state and in their respective regional languages.

No comments:
Post a Comment
Please Comment