ஃபிரிட்ஜில் முட்டையை வைப்பது சரி தானா..?! அப்படி வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா..?! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஃபிரிட்ஜில் முட்டையை வைப்பது சரி தானா..?! அப்படி வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா..?!

ஃபிரிட்ஜில் முட்டையை வைப்பது சரி தானா..?! அப்படி வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா..?!


நமது வீட்டின் முதன்மையான மின் சாதனங்களில் ஃபிரிட்ஜூம் அடங்கும். நாம் வெட்டிய காய்கறி மீந்தால் கூட அதனை ஃபிரிட்ஜில் வைத்து அடுத்த முறை பயன்படுத்தி கொள்வோம். காய்கறிகள், பழங்கள், உணவு பொருட்கள், ஸ்னாக்ஸ்கள் இப்படி பல வகையான பொருட்களை நாம் இப்போதெல்லாம் ஃபிரிட்ஜில் தான் வைக்கின்றோம்.

ஆனால், ஃபிரிட்ஜில் வைக்க கூடாத பலவகையான பொருட்களும் இருக்கின்றன. உதாரணத்துக்கு தக்காளி, உருளை கிழங்கு, வெங்காயம், பூண்டு போன்றவை இந்த வரிசையில் அடங்கும். இதில் மிக முக்கியமான இடத்தில் வரக்கூடிய ஒன்றும் உள்ளது.

அதுதான் முட்டை. முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கலாமா..? கூடாதா..? என்பதை பற்றி நாம் அறியாமலே ஃபிரிட்ஜில் வைத்து கொள்கிறோம். ஃபிரிட்ஜில் முட்டையை வைப்பது சரியா..? தவறா..? என்பதை இனி அறிவோம். 

கோழியில் இருந்து முட்டை வந்ததா..? இல்ல முட்டையில் இருந்து கோழி வந்ததா..? என்ற விவாதத்தை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இது ஒரு புறம் இருக்க, முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கலா..? கூடாதா..? என்ற முக்கிய கேள்விக்கு விடை தெரியாமலே முழித்திருப்போம்.

என்ன இருந்தாலும் முட்டையை காதலிப்போரே இங்கு அதிகம். ஃபிரிட்ஜில் நாம் உண்ணும் உணவு பொருட்களில் முக்கால் வாசியை இதனுள் திணித்து விடுவோம். இந்த வரிசையில் முட்டையும் அடங்கும். முட்டையை ஏன் ஃபிரிட்ஜில் வைக்க கூடாது என சொல்கிறார்கள் என்றால்,

அதற்கு காரணம் சால்மோனெல்லா (Salmonella) என்கிற பாக்டீரியா தான். இந்த சால்மோனெல்லா என்கிற பாக்டீரியா விலங்குகளின் குடலில் வாழ கூடிய ஒரு வகை நல்ல பாக்டீரியா. ஆனால், இது விலங்குகளின் உடலை விட்டு வெளியே வந்து விட்டால், மனிதனுக்கு தீங்கை விளைவிக்கும்.

இவை முட்டையின் மேல் ஓட்டிலும், உட்பகுதியில் இருக்கிறதாம். முட்டையை ஃபிரிட்ஜில் வைத்தால் அந்த பாக்டீரியாவை அப்படியே தான் இருக்க போகிறது. முட்டையை வெளியில் வைத்தாலும் இந்த பாக்டீரியா அதில் இருக்கும்.

நாம் ஃபிரிட்ஜில் முட்டையை வைப்பதை நிர்ணயிப்பதே இந்த பாக்டீரியா தான். அமெரிக்கர்கள் இந்த முட்டையை ஃபிரிட்ஜில் வைத்து தான் பராமரிப்பார்களாம். முட்டையை ஃபிரிட்ஜில் வைப்பதால் முட்டை கெட்டு போகாமல் தடுக்கலாம் என இவர்கள் நம்புகிறார்கள்.

ஃபிரிட்ஜில் முட்டையை வைப்பதால் பாக்டீரியா அதனுள் செல்லாமல் இருக்குமே தவிர இறந்து விடாது.அமெரிக்கர்கள் ஃபிரிட்ஜில் முட்டையை வைப்பதை போன்று ஐரோப்பர்கள் வைப்பத்திலை. இவர்கள் வெளியே முட்டையை வைத்து பயன்படுத்துகின்றனர்.

இவர்கள் முட்டையை பெறும் முன் பல வகையில் தூய்மையாக வைத்து கொள்ள செய்கின்றனர். ஃபிரிட்ஜில் முட்டையை வைப்பதால் முட்டை நீண்ட நாட்கள் கெடமல் இருக்குமே தவிர அதில் உள்ள பாக்டீரியா சாகாது.

எனவே, முட்டையை உள்ளே வைத்தாலும் வெளியே வைத்தாலும் அதில் உள்ள பாக்டீரியா தான் முக்கிய பங்காக விளங்குகிறது. முட்டை அதிக நாட்கள் கெடாமல் இருக்க வேண்டும் என்றால் மட்டுமே ஃபிரிட்ஜில் வைத்து கொள்ளலாம்.

எதுவாக இருந்தாலும் முட்டையை நாம் வேக வைத்தோ, பொறித்தோ சாப்பிடும் போது அந்த சூட்டில் சல்மோனேல்லா பாக்டீரியா இறந்து விடும்.ஃபிரிட்ஜில் முட்டையை வைத்து பயன்படுத்தினால் 7 முதல் 10 நாட்கள் கெடாமல் இருக்கும்.

இதுவே வெளியில் வைத்து அப்படியே பயன்படுத்தினால் 3 முதல் 4 நாட்கள் கெடாமல் இருக்கும். இது குளிர் காலத்திற்கான கணக்காகும். இது கோடை காலத்தில் சற்றே மாறுபடும்.



Is it OK to put an egg in the fridge? Do you know what will happen if ..?



Fritzum is among our home's premier electrical appliances. Even if we have leftover veggies, we will keep it in the fridge for the next time. Vegetables, fruits, food items, snacks, and so on, we now keep everything in the fridge. But there are a variety of items that should not be kept in the fridge. Examples include tomatoes, potatoes, onions, garlic, etc. There is something that could come up in this very important place. 

That is the egg. Put the egg in the fridge ..? .. why not? We keep it in the fridge unknowingly. Is it okay to lay eggs in the fridge? Wrong ..? We no longer know.Did the eggs come from the chicken ..? Did the chicken come out of the egg ..? We are all familiar with the debate. To put it on one side, put the egg in the fridge ..? .. why not? We will finish the question without knowing the answer. 

Whatever the case, there is much to love here. We put three-quarters of the food items in the fridge. This line includes eggs. If you tell the egg why it should not be kept in the fridge, it is because of the bacteria called Salmonella. Salmonella bacteria are good bacteria that live in the intestines of animals. But, if it comes out of the animal's body, it can harm man. These are in the upper part of the egg and in the interior.

Putting the egg in the fridge is going to keep the bacteria intact. Even if the egg is outside, these bacteria are in it. It is these bacteria that determine how we place the egg in the fridge. Americans keep this egg in the fridge. They believe that placing the egg in the fridge can prevent the egg from getting spoiled. Placing the egg in the fridge does not cause bacteria to enter it but die. They use the egg outside. They keep the egg clean in several ways before they get it.

Placing the egg in the fridge will keep the egg for a long time and the bacteria in it will not die. Therefore, the bacteria in the egg, whether inside or outside, play a major role. Eggs can only be stored in the fridge if they need to last longer. When we eat or boil the egg, the salmonella bacteria will die in the suitcase. If you use it outside, it will last 3 to 4 days. This is the account for the cold season. It varies slightly in the summer.

No comments:

Post a Comment

Please Comment