குடும்ப ஓய்வூதியர்களுக்கான
உயிர்வாழ் சான்றிதழ் பெறும் பணி நிறுத்தி வைப்பு
மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்க தமிழக அரசு அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு தெரிவித்துள்ளது. அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் உயிர்வாழ் சான்று அளிக்க வரும் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் நலன் கருதி 2020-2021-ம் ஆண்டுக்கான உயிர்வாழ் சான்று பெறும் பணி மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
எனவே ஓய்வூதியர்கள் மறு அறிவிப்பு வரும் வரை உயிர்வாழ் சான்று அளிக்க வரவேண்டாம் என மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Please Comment