‘குவாரண்டைன்’ என்பது என்ன? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

‘குவாரண்டைன்’ என்பது என்ன?

‘குவாரண்டைன்’ என்பது என்ன? 

சமீபத்திய அனைத்து விதமான செய்திகள், தகவல்களிலும் அடிபடும் வார்த்தை ‘குவாரண்டைன்’. கொரோனா வைரஸ் பாதிப்பு வந்த பிறகு இது அதிகமாக பொதுமக்கள் மற்றும் சமூக ஊடகங்களால் உச்சரிக்கப்படுகிறது. அது என்ன குவாரண்டைன்? வாருங்கள் தெரிந்துகொள்வோம்... 



வைரஸ் என்பது மிகச்சிறிய புரதங்கள் மற்றும் மரபணு பொருட்களை கொண்ட உயிரி. உலகில் நூற்றுக்கணக்கான வைரஸ்கள் உள்ளன. வைரஸ் தொற்றால்தான் காய்ச்சல், சளி போன்றவையும் ஏற்படுகிறது. சில வகையான வைரஸ்கள் நேரடியாக ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவும். ஹெச்.ஐ.வி போன்ற வைரஸ், பாதிக்கப்பட்ட நபருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வதன் மூலம் பரவும். வைரஸ் தொற்று பரவுதலை எண்டமிக், எபிடமிக் மற்றும் பாண்டமிக் என 3 வகைகளாக பிரிக்கலாம். 



 எண்டமிக் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த நேரம் வேண்டுமானாலும் பரவக்கூடிய வைரசாகும். உதாரணம்: அம்மை நோய். எபிடமிக் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அதிகமாக பரவக்கூடிய நோயாக இருக்கும். உதாரணம்: மலேரியா. பாண்டமிக் வகையை சேர்ந்த வைரஸ்கள் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் பரவக்கூடியதாகும். இதுதான் கொரோனா வைரஸ் பாதிப்பாகும். இன்று உலகம் முழுவதையும் உலுக்கி எடுக்கும் வைரஸ் இதுவாகத்தான் இருக்கும். 

இதன் பாதிப்பால் பல்வேறு உலக நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. விமான போக்குவரத்து நிறுவனங்கள் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் உள்ளன. இது ஒரு புறம் இருந்தாலும் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை மட்டுமல்லாமல் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் சிகிச்சைக்கு அழைத்து செல்வது மட்டுமே நமக்கு தெரிகிறது. 

அவர்களை அழைத்து சென்று என்ன செய்கிறார்கள்? எப்படி சிகிச்சை அளிக்கப் படுகிறது? இந்த கேள்வி அனைவரிடமும் இருக்கும். வாருங்கள் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டு தலின்படி அமீரகத்தில் எப்படி சிகிச்சை அளிக்கப் படுகிறது என்பதை தெரிந்துகொள்வோம். கீழ்காணும் தகவல்கள் அமீரக சுகாதாரத்துறையிடம் இருந்து பெறப்பட்டதாகும். 



முதலில் தெர்மல் இமேஜிங் என கூறப்படும் தொழில்நுட்பத்தில்தான் கொரோனா வைரஸ் தாக்குதல் அடையாளம் காணப்படுகிறது. உடலில் உள்ள வெப்பநிலை இதில் முக்கிய பங்கு வகிப்பதால் மனிதர்களின் உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் அவர்கள் தனியாக அழைத்து செல்லப்படுகிறார்கள். தற்போது இதில் அதிகமாக உச்சரிக்கப் படும் வார்த்தை குவாரண்டைன் (quaran tine) என்பதாகும். ‘ஐசோலேசன்’ எனப்படும் தனிமைப்படுத்துதலுக்கும் குவாரண்டைன் எனப் படுவதற்கும் என்ன வித்தியாசம் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். 

ஐசோலேசன் எனப் படுவது கொரோனா வைரசால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களை தனிமைப் படுத்தி சிகிச்சை அளிப்பதாகும். குவாரண்டைன் என்பது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டவர்களை தனிமைப்படுத்தி மருத்துவ கண்காணிப்பில் வைத்துக்கொள்வதாகும். 

கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்டிரைல் ரூம்ஸ் எனப்படும் முற்றிலும் கிருமி நீக்கம் செய்யப்பட்ட அறையில் பாதுகாப்பாக தங்க வைக்கப்படுகிறார்கள். அந்த அறையில் காற்றோட்ட வசதி மற்றும் அறையின் காற்று அழுத்தம் ஆகியவை சரியாக பராமரிக்கப்படுகிறது. இதற்காக உள்ளே இருந்து காற்றை வெளியேற்றும் எக்ஸ்சாஸ்ட் வசதிகொண்ட தொழில்நுட்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

இது மற்ற அறைகளில் வைரஸ் பரவாமல் தடுக்கும் முறையாகும். தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் நோயாளிகளுக்கு கிருமி நீக்கம் செய்யப்பட்ட பாதுகாப்பான உடைகள் மற்றும் கவசங்கள் அணிவிக்கப்படுகின்றன. அவர்கள் குணமடைந்து பாதுகாப்பாக வீட்டிற்கு சென்று சேரும் வரை இந்த நடைமுறை தொடர்கிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 14 நாட்கள் வீட்டில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கும் மருத்துவ கண்காணிப்பு அளிக்கப்பட்டு வருகிறது. 

சிலருக்கு ஓட்டல் அறையில் கூட சிகிச்சை அளிக்கலாம். இதை பலர் வீட்டுச்சிறை என நினைக்கிறார்கள். அது தவறு. இது சிறைச்சாலை அல்ல. தாராளமாக அன்றாடம் செய்யும் வேலைகளை அவர்கள் செய்யலாம். பொதுமக்களுக்கு அடுத்த மிகப்பெரிய கேள்வியாக எழுவது, அது என்ன ‘14 நாட்கள் குவாரண்டைன்?’ என்பதுதான். அதாவது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருடன் பள்ளிக்கூடம், விமானம், நிகழ்ச்சிகள் அல்லது பொது இடங்களில் எங்காவது கை குலுக்கி அல்லது நெருங்கி அருகில் நின்று பேசிக்கொண்டு இருந்திருக்கலாம். 

அப்போது அவருடன் அருகில் நின்றவர்களுக்கும் அந்த வைரஸ் பரவும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. எனவேதான் அவர்களுக்கும் அந்த நோயின் அறிகுறிகள் அல்லது தாக்கம் இல்லை என்பதை அறிந்துகொள்ள 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இந்த முறைதான் குவாரண்டைன் எனப்படுகிறது. குவாரண்டைன் செய்யப்பட்டவர் கள் வேறு யாரையும் 14 நாட்கள் சந்திக்கக்கூடாது. 



தனக்கு உணவு மற்றும் உதவிக்காக ஒரே ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். அதேபோல அவர்கள் தங்களை மிக சுகாதாரமாக பராமரித்துக்கொள்ள வேண்டும். துணிகளை தனியாக துவைக்க வேண்டும். தனி இடத்தை ஒதுக்கித்தான் வெயிலில் உலர்த் தவும் வேண்டும். கைகளை சோப்பு போட்டு அடிக்கடி கழுவ வேண்டும். கிருமிநாசினி திரவங்களை கைகளில் பூசிக்கொள்ள வேண் டும். 

மேலும் தனி கழிவறைகளை பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் மலத்தின் மூலமாக கொரோனா வைரஸ் பரவும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அமீரகத்தை பொறுத்தவரையில் கொரோனா வைரஸ் தாக்குதல் அறிகுறிகள் தென்பட்டால் மருந்து கடைகளில் மாத்திரை வாங்கி சாப்பிடக்கூடாது. உடனடியாக மருத்துவ கட்டுப்பாட்டு அறை, சுகாதார ஆணையத்தின் எண் ஆகியவைகளை தொடர்பு கொண்டு தகவல் அளித்தால் குவாரண்டைன் எனப்படும் தனிமைப்படுத்தும் முறைக்கு பாதிக்கப்பட்டவர்கள் அழைத்துசெல்லப்படுவர். 

இந்த சேவையை 24 மணி நேரமும் பொதுமக்கள் பெறலாம். அமீரகம் மட்டுமின்றி தமிழகத்திலும் இதுபோன்ற கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனர். சில நாடுகளில் சுகாதார அமைச்சகத்தின் சார்பில் அளிக்கப்படும் மருத்துவ கண்காணிப்பு மற்றும் சிகிச்சையில் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் நேரத்தை செலவிடுவது, புத்தகங்களை படிப்பது, உடற்பயிற்சி செய்வது என அனைத்து பொழுதுபோக்கு தொடர்பான செயல்களை செய்வதற்கும் பரிந்துரைக்கப்படுகிறது. 



 கொரோனா வைரஸ் தாக்குதல் அல்லது பாதிப்பிற்கு முன் தடுப்பு அல்லது சிகிச்சைக்கான மருந்துகள் கிடையாது. மாறாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் மற்ற நோய்கள் வராமல் தடுக்கவும், தனிமைப் படுத்தப்பட்ட காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் சிகிச்சை வழங்கப்படுகிறது. சுகாதாரம் எனப்படுவது நம்மை சுற்றி நாம் எப்படி பாதுகாத்துக்கொள்கிறோம் என்பதை பொறுத்து அமைகிறது. எனவே சூழ்நிலையை கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக செயல்படுவோம்.

No comments:

Post a Comment

Please Comment