கரோனா வைரஸ் பள்ளி, கல்லூரி களில் விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டும். வதந்தி பரப்பினால் நடவடிக்கை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கரோனா வைரஸ் பள்ளி, கல்லூரி களில் விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டும். வதந்தி பரப்பினால் நடவடிக்கை

கரோனா வைரஸ் வதந்தி பரப்பினால் நடவடிக்கை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை 

கரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் எச்சரித்துள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு ஆலோ சனைக் கூட்டம் ஆட்சியர் சண்முக சுந்தரம் தலைமையில் நேற்று நடைபெற்றது. 


கூட்டத்தில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் யாஸ்மின், துணை இயக்குநர் சுரேஷ், அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வி, மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நலத்துறை தலைவர் மருத்துவர் தேரணிராஜன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். 


இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் சண்முகசுந்தரம் பேசும்போது, ‘‘வேலூர் மாவட்டத்துக்கு சீனாவில் இருந்து வந்த 12 பேர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு கரோனா வைரஸ் சம்பந்தமான அறிகுறிகள் எதுவும் இல்லை. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எதில் பயணம் செய்தார்கள், அவருடன் வந்தவர்கள் யார்? என்பது போன்ற விவரங்களை சேகரித்தால் தான் கண்காணிக்க முடியும். 

 வேலூர் மாவட்டத்தில் வாலாஜா அரசு மருத்துவமனை மற்றும் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் கரோனா வைரஸ் சிகிச்சைக்காக தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து அரசு மருத்துவமனை களிலும் சிறப்பு வார்டுகள் தொடங்க வேண்டும். மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களை அணிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். 


முகக் கவசம் பற்றாக்குறையாக இருந்தால் உடனடியாக போதுமான அளவுக்கு இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் புனே, சென்னை கிண்டி ஆகிய இடங்களில் தான் கரோனா நோய் கண்டுபிடிப்பு சம்பந்தமான ஆய்வுக் கூடங்கள் உள்ளன. மேலும், 11 இடங்களில் ஆய்வு மையங்கள் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் பெரும் சவாலாக உள்ளது. 38 டிகிரிக்கு மேல் வெயில் இருக்கும் இடத்தில் கரோனா தாக்கம் இருக்காது என கூறியுள்ளார்கள். 

பள்ளி, கல்லூரி களில் இந்நோய் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டும். கரோனா வைரஸ் குறித்து தேவையற்ற வதந்தியை பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Please Comment