அறிவியல் அறிவோம் : போடோக்ஸ் என்பது என்ன?
இது ஒரு வகை சிகிச்சை முறையாகும். சுத்திகரிக்கப்பட்ட புரதத்தை குளோஸ்ட்ரிடியம் போடுலினியம் எனும் பாக்டீரியாவில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இதை ஊசி மூலம் உடலில் செலுத்தி சில பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. முகத்தில் இந்த ஊசி மருந்தை செலுத்தும்போது, தோலின் அடியில் தசை செல்கள் முடக்கம் அடைகிறது.
இது ஒருவிதமான பழுப்பு வளைய தோற்றத்தை தற்காலிகமாக உருவாக்கும்.
இந்த சிகிச்சையானது சரும பொலிவு வருவதற்காக செய்யப்படுகிறது. இது சில நாட்களில் இருந்து சில மாதங்கள் வரை சருமப் பொலிவுக்கு காரணமாக இருக்கிறது. ஒருபக்க தலைவலி, அதிக வியர்வை, கழுத்து மற்றும் கண் தசைப்பிடிப்பு போன்றவற்றுக்கும் போடோக்ஸ் முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment
Please Comment