அறிவியல் அறிவோம் : மோதிரங்கள் இறுகிக் கொள்ள காரணம் என்ன? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அறிவியல் அறிவோம் : மோதிரங்கள் இறுகிக் கொள்ள காரணம் என்ன?

அறிவியல் அறிவோம் : மோதிரங்கள் இறுகிக் கொள்ள காரணம் என்ன? 

உடலில் நீர்ச்சத்து சமநிலை இழப்பினால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும். இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. 


மாதவிடாய் காலத்திற்கு முந்தைய உடல்செயல் பாதிப்புகள், உணவுப் பழக்கத்தால் உப்புச்சத்து மிகுதல், உடற்பயிற்சி குறைவு, இதயக்கோளாறுக்கான மருந்துகள் உள்ளிட்ட சில மருந்துகள் போன்றவற்றால் உடலில் உப்பு-நீர்ச்சத்து சமநிலை பாதிக்கப்படுவதால் 

இந்த மாற்றங்கள் நிகழலாம். இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புகள் மற்றும் நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளின் தீவிர மடைவதன் அறிகுறியாகவும் 


நீர்ச்சமநிலையின்மை ஏற்பட்டு இதுபோன்ற அறிகுறிகள் தென்படலாம். உப்பு சேர்க்கையின் அளவை குறைப்பது, தண்ணீர் நிறைய குடிப்பதன் மூலம் அதிகப்படியான உப்பை வெளியேற்றுவது, உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கம் மூலமும் இதை கட்டுப்படுத்தலாம்.

No comments:

Post a Comment

Please Comment