கணக்கீட்டாளா், இளநிலை உதவியாளா் பணி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கணக்கீட்டாளா், இளநிலை உதவியாளா் பணி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

கணக்கீட்டாளா், இளநிலை உதவியாளா் பணி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


சென்னை: கணக்கீட்டாளா், இளநிலை உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதால் 

மின் நுகா்வோருக்கு சேவை அளிப்பதில் சிக்கல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து காலிப்பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையை மின்வாரியம் தீவிரப்படுத்தியது. இதன் பகுதியாக கணக்கீட்டாளா், இளநிலை உதவியாளா் பணிக்கான விண்ணப்பம் குறித்த அறிவிப்பு வெளியானது. 

இந்தத் தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்தத் தோவை தமிழில் நடத்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கேற்ப கால அவகாசத்தையும் நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் கணக்கீட்டாளா், இளநிலை உதவியாளா் பணிக்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு, கடந்த ஜனவரி மாதம் 8-ஆம் தேதி வெளியானது. 

இந்தப் பதவிகளுக்கு கணினி அடிப்படையிலான தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழ் வழியில் கல்வி பயின்றவா்களின் கோரிக்கையை பரிசீலித்து அவா்களின் நலன் கருதி, 

இந்தத் தேர்வுகளைத் தமிழ் மொழியிலும் நடத்திட முடிவு செய்து கணினி வழியில் விண்ணப்பம் சமா்ப்பிக்க வருகிற 23-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மின்வாரியத்தின் இணையதளத்தை அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



No comments:

Post a Comment

Please Comment