கண் பரிசோதனை செய்யும் செயலி.ஒன்பது வயது மும்பை சிறுவன் சாதனை!!!
ஒவ்வொருவர் கையிலும் தற்போது ஸ்மார்ட் போன் இருக்க எதற்கும் அஞ்சாமல் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலைமை தற்போது உள்ளது. பல விதமான செயலிகள் கொண்ட ஸ்மார்ட் போன்கள் உலகையே நம் கைக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.
எல்லாவற்றிற்கும் தற்போது செயலிகள் வந்துவிட்டது.
நம் வாழ்க்கையை மாற்றி வைத்துள்ளது இந்த ஸ்மார்ட் போன். சமீபத்தில் மும்பையை சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் ஒரு செயலியை கண்டுபிடித்துள்ளான்.
கர்வித் சூத் என்ற அந்த சிறுவன் கண்களை பரிசோதிக்க உதவும் ஒரு செயலியை உருவாக்கி உள்ளான். அந்த செயலியின் பெயர் ‘திரிஷ்டி’. WhiteHat Jr. என்ற EdTech நிறுவனத்தில் ஆறு முதல் பதினான்கு வயதிலான குழந்தைகளுக்கு கோடிங் எழுத பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த நிறுவனத்தில் பயிற்சி பெற்றார் கர்வித். ‘அஸ்டிக்மாட்டிஸம்’ என்ற கண் கோளாறால் பாதிக்கப்பட்ட அச்சிறுவன் தன்னுடைய கோடிங் அறிவை இதனை சரி செய்ய முயற்சி செய்யலாம் என நினைத்து இச்செயலியை உருவாக்கி உள்ளான்.
பல விதமான அளவில் இருக்கும் எழுத்துக்கள் மற்றும் எண்களை போன் ஸ்கிரீனில் படிக்க வைக்கிறது அந்த செயலி. அதனை பயனாளர்கள் எவ்வாறு படிக்கின்றார்கள் என்பதை பொருத்து அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
இந்த மதிப்பெண்களின் மூலம் அவர்கள் மருத்துவரிடம் சென்று அணுக வேண்டுமா வேண்டாமா என்பதை பரிந்துரைக்கும்.
கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு இது ஒரு வரமாக இருக்கும். அவ்வளவு சுலபமாக மருத்துவரிடம் செல்ல முடியாத சூழ்நிலை இருப்பவர்கள் இந்த செயலியை பயன்படுத்தலாம்.
மருத்துவர்கள் கூட தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு ஆரம்ப நிலையில் இந்த செயலியின் மூலம் பரிசோதிக்கலாம்.
இந்த கண்டுபிடிப்பிற்காக கர்வித் WhiteHat Jr. ன் சிலிகான் வேலி ப்ரோகிராமிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு சிறுவர்களுல் ஒருவர் ஆவார்.
ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் இவர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த ப்ரோகிராமின் ஒரு பகுதியாக கர்வித், சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள சிலிகான் வேலியை பார்வையிட்டு முக்கியமான நிறுவனங்களான
Nexus Venture Partners மற்றும் Owl Ventures க்கு செல்ல உள்ளார். மேலும் தொழிலதிபர்களுக்கான வழிகாகாட்டுதலை பெறுவார்கள். இது மட்டும் இல்லாமல் கூகுள் பிளக்ஸை சந்தித்து ஓட்டுநர் இல்லாத காரை தயாரிக்கும் ப்ராஜக்ட்டைப் பற்றி அதன் இன்ஜினியர்களிடம் பேச உள்ளனர்.
9 year old Mumbai boy achievement !!!
Everybody has a smart phone right now and can go anywhere without fear. Smart phones with many different processors help keep the world in our hands. Now the processors have arrived. This smart phone has changed our lives. Recently, a nine-year-old boy from Mumbai has found a processor to help improve our lives. The boy named Karvid Sood has created a processor to test the eyes.
The name of the processor is the trident. WhiteHat Jr. Six to fourteen year olds were trained to write coding at EdTech. Gerwith trained in this company. The asymptomatic model of the eye has developed this process, thinking that the coroner may try to correct his coding knowledge. The processor reads the letters and numbers of various sizes on the phone screen. The users will be given marks based on how they read it.
These scores will indicate whether they should go to the doctor or not. It will be a boon for the people in the villages. This procedure can be used by those who cannot afford to go to the doctor easily. Doctors can also check patients who come to them with this procedure. Gerwith WhiteHat Jr. for this invention. She is one of twelve boys selected for the Silicon Valley Program.
He has won over seven thousand boys competitions. As part of that program, Gerwith will visit Silicon Valley in San Francisco and move on to major companies such as Nexus Venture Partners and Owl Ventures. More entrepreneurs will receive guidance. Not only that, they are also meeting with Google Plugins to talk to its engineers about a car-making project.

No comments:
Post a Comment
Please Comment