உண்டியலில் சேமித்த மொத்த பணத்தையும் கொரோனா நிதிக்கு அளித்த திருச்சி சிறுமி..! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

உண்டியலில் சேமித்த மொத்த பணத்தையும் கொரோனா நிதிக்கு அளித்த திருச்சி சிறுமி..!

உண்டியலில் சேமித்த மொத்த பணத்தையும் கொரோனா நிதிக்கு அளித்த திருச்சி சிறுமி..! குவியும் வாழ்த்துக்கள்.!

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், கொரோனா வைரஸ் எதிர்ப்பு பணிகளுக்காக பிரதமர் மோடி நிதி உதவி செய்யுமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார். பிரதமர் கேட்டுக்கொண்டதை அடுத்து பல்வேறு நிறுவனங்களும், பிரபலங்களும் நிதி வழங்கிவருகின்றனர்.இந்நிலையில், பிரதமரின் வேண்டுகோளை கேள்விப்பட்ட திருச்சி மாநகரம் சஞ்சீவி நகர் பகுதியை சேர்ந்த பொன்மலை ரயில்வே பணிமனை கண்காணிப்பாளர் ஜெகன் என்பவரின் மகள் பார்வதி தான் சேமித்து வைத்திருந்த 4,015 ரூபாயை பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். 

பல்வேறு முன்னணி நடிகர், நடிகைகளும் நிவாரணம் ஏதும் அறிவிக்காமல் அமைதி காத்து வரும் நிலையில், தனது மொத்த சேமிப்பையும் நிதியாக வழங்கிய சிறுமிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

No comments:

Post a Comment

Please Comment