தமிழகத்தில், துப்புரவு பணியாளர்கள் பெயர் மாற்றம்.. முதல்வர் அசத்தல் அறிவிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தமிழகத்தில், துப்புரவு பணியாளர்கள் பெயர் மாற்றம்.. முதல்வர் அசத்தல் அறிவிப்பு

தமிழகத்தில், துப்புரவு பணியாளர்கள் பெயர் மாற்றம்.. முதல்வர் அசத்தல் 

அறிவிப்பு தமிழகத்தில் இனிமேல் துப்புரவு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் துப்புரவு பணியாளர்கள் என்று அழைக்கப்பட மாட்டார்கள். அதற்கு பதிலாக தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள். கடந்த 9ம் தேதி முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இன்று சட்டசபை விதி எண் 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், 12,552 ஊரக சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் கடன் வழங்கப்படும் என்றார்.ஸ்மார்ட் மீட்டர்கள் மேலும், கரூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.330 கோடியில் சுற்றுவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும், தொழில்நுட்ப வணிக இழப்புகளை குறைக்க ஸ்மார்ட் மீட்டர்கள் செயல்படுத்தப்படும். 

இதன்படி, சென்னையில் 42 லட்சம் மின்சார நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த ரூ. 4,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 கி.மீ பாதையில் ரூ. 300 கோடியில் புதைவடை மின் தடம் அமைக்கப்படும், முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதைவட கம்பிகள் அமைக்கப்படும், கால்நடைகளை பாதுகாக்க ரூ. 258 கோடியில் 9,000 மாட்டுக்கொட்டகைகள் 6,000 ஆட்டுக்கொட்டகைகள் கட்டித்தரப்படும். தூய்மை பணியாளர்கள் விளைநிலங்களை அதிகரிக்கும் வகையில் 1000 கிணறுகள் ரூ. 99 கோடி மதிப்பில் அமைக்கப்படும், மக்கள் நலன், பொது சுகாதாரத்தை பேணும் வகையில் பணியாற்றிடும் துப்புரவு பணியாளர்களின் செயல்பாடுகளை கௌரவிக்கும் வகையிலும், அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிடவும், அனைத்து துப்புரவு பணியாளர்களும் இனி "தூய்மை பணியாளர்கள்" என அழைக்கப்படுவர். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

பெயர் மாற்றம் இலவசம் என்று கூறினால், மதிப்பு குறைவு என்பதால், விலையில்லா திட்டங்கள் என அதற்கு பெயர் சூட்டினார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஊனமுற்றோர் என்று கூறுவது சரியான வார்த்தை கிடையாது என்பதால் மாற்றுத் திறனாளிகள் என்ற வார்த்தை பயன்பாடு எல்லா இடங்களிலும் கொண்டு வரப்பட்டது. அதேபோல துப்புரவு என்பதை விடவும், தூய்மை என்ற வார்த்தை நன்றாக இருப்பதுதான் இந்த பெயர் மாற்றத்திற்கு காரணம். 

No comments:

Post a Comment

Please Comment