கொரோனா வைரஸ்: ஆரோக்கியமாக இருக்க வீட்டில் தினமும் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!
கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியாவை பொறுத்த வரை 190 பேர் பாதிப்படைந்து உள்ளனர். பொதுக்கூட்டங்கள், மக்கள் கூட்டமான நிகழ்ச்சிகள், மால், தியேட்டர் போன்ற கூட்டமான இடங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து டெல்லியில் ஓரே நேரத்தில் 50 பேர்கள் கூடும் அரசாங்க கூட்டத்திற்கு கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த கொடிய நோய் பரவுவதை தடுக்கவே இந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் செய்து வருகிறது.
ஆனால் இந்த நடவடிக்கைகள் கொரோனா பரவுவதை தடுக்க மட்டுமே. ஆனால் கொரோனா நோயிலிருந்து நம்மை காக்க வேண்டும் என்றால் அதற்கு நாம் முதலில் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. எனவே வீட்டிலேயே சுத்தப் பராமரிப்புடன் உடல் நல பராமரிப்புக்கு என்று சில உடற்பயிற்சிகளையும் செய்து வாருங்கள்.
கொரோனா வைரஸ்: ஆரோக்கியமாக இருக்க வீட்டில் தினமும் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!
ஸ்கிப்பிங் உடற்பயிற்சி: சிறுவயதில் பள்ளிப் பருவத்தில் இந்த ஸ்கிப்பிங் செய்து இருப்போம். உண்மையில் நம் உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைப்பதில் ஸ்கிப்பிங் மிகச் சிறந்த பங்காற்றுகிறது. எனவே வீட்டிலேயே சில நிமிடங்கள் ஸ்கிப்பிங் பயிற்சியை நீங்கள் செய்து வரலாம்.
இதுவே உங்களுக்கு மூட்டு வலி பிரச்சனை இருந்தால் இந்த உடற்பயிற்சி வேண்டாம். காரணம் இது பிரச்சினையை மேலும் பெரிதாக்க வாய்ப்புள்ளது.
நுரையீரலுக்கான உடற்பயிற்சிகள் : கொரோனா வைரஸ் முதலில் தாக்குவது நம் சுவாச மண்டலத்தை தான் என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே நுரையீரல் பலவீனப்படும் போது நாம் மூச்சுவிட சிரமம், மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை சமாளிக்க நீங்கள் சில சுவாச பயிற்சிகளை செய்து வரலாம்.
1 அல்லது 2 லிட்டர் தண்ணீர் பாட்டிலை குடித்து நுரையீரல் திறனை அதிகரிக்கலாம். நிறைய நுரையீரல் சம்பந்தப்பட்ட உடற்பயிற்சிகளை செய்து வருவது உங்களுக்கு சுவாச பாதையில் ஏற்படும் தொற்றை சமாளிக்க உதவி செய்யும். கைகளை மேலே உயர்த்தி மூச்சை நுரையீரல் முழுவதும் நிரப்பி வெளிவிடுவது போன்ற உடற்பயிற்சிகளை செய்து வரலாம்.
சுவரில் உட்காரும் உடற்பயிற்சி : இதுவும் ஒரு எளிதான வீட்டு உடற்பயிற்சி ஆகும். வீட்டில் உள்ள ஒரு சுவரில் முதுகை வைத்து சாய்ந்து கொள்ளுங்கள். பிறகு முழங்காலை மடக்கி சேரில் அமர்வது போன்று அமர்ந்த நிலையில் இருங்கள். நமது தொடைகள் தரையுடன் இணையாக இருக்க வேண்டும்.
முதுகுப் பகுதி சுவரால் சப்போர்ட் செய்யப்பட வேண்டும். 30 விநாடிகள் இந்த நிலையிலேயே இருக்க வேண்டும். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நேரத்தை அதிகரித்து செய்து வாருங்கள்.
டம்பள்ஸ் பயிற்சி: இந்த உடற்பயிற்சி செய்ய டம்பள்ஸ் தேவைப்படுகிறது. ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு முதுகை பின்புறம் அழுத்திக் கொள்ளுங்கள். இப்பொழுது கைகளை மேலே உயர்த்தி டம்பள்ஸை தலைக்கு மேலே உயர்த்தி கொள்ளுங்கள்.
முழங்கையை சுருக்கக் கூடாது. நன்றாக கைகளை நீட்டி டம்பள்ஸ் எடுக்க ஆரம்பியுங்கள்.
மேற்கண்ட உடற்பயிற்சி உங்க சுவாச மண்டலத்தை வலிமையாக்குவதோடு உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும், சுவாச பாதையில் ஏற்படும் தொற்றை சமாளிக்கும் திறனையும் அளிக்கிறது.



No comments:
Post a Comment
Please Comment