தனிமையை விரட்ட விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறும் யோசனைகளை கேளுங்கள்!!!!
COVID-19 நம் எல்லோரையும் வீட்டிற்குள்ளே இருக்கச் செய்ய கட்டாயப்படுத்தி விட்டது. அதோடு சமூக விலகலை பின்பற்றி கொரோனாவை தடுக்க அனைவரும் முயற்சி செய்து வருகிறோம். வீட்டிற்குள் இருப்பது முதல் இரண்டு நாட்களுக்கு ஜாலியாக இருந்தாலும் போக போக அது வேற மாதிரி மாறி வருகிறது.
ஆனால் இது போன்ற தனிமையை எப்படி சமாளிப்பது என்று ஒருவருக்கு நிச்சயம் தெரியும்.
அவர்கள் தான் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். யாருமே இல்லாமல் தனியாக இருக்க பழகியவர்கள் இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸாடேஷனில் உள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.
குடும்பம், சமூகம், நண்பர்கள் என்று எல்லோரிடமிருந்தும் பிரிந்து அவர்களுக்கென வடிவமைக்கப்பட்ட ஒரு இயந்திரத்திற்குள் மாதக்கணக்கில் எப்படி இவர்களால் தனியாக வாழ முடிகிறது என்று நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் வாழ்க்கை. இதனை அனுபவிக்கும் போது தான் அதன் வலி வருத்தம் நமக்கு புரிகிறது.
தனிமையில் வாழ அனுபவம் கொண்ட விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நமக்கு ஒரு சில அறிவுரை கூறுகிறார்கள். அது என்ன என தெரிந்து கொள்ளலாம்.
நாசா நிறுவனத்தை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளரான ஸ்காட் கெல்லி கிட்டத்தட்ட ஒரு வருடம் (International Space Station) ISS ல் இருந்துள்ளார்.
இது போன்ற அசாதாரணமாகன சூழலில் தனியாக இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட வழக்கத்தை பின்பற்ற வேண்டும் என கூறுகிறார் கெல்லி. நியூயார்க் டைம்ஸிடம் அவர் கூறியதாவது,”இது போல வீட்டிற்குள் மாட்டிக் கொண்டு இருக்கும் நேரம் நாம் செய்ய நிறைய விஷயங்கள் உண்டு.
அதற்காக அதிகமாக வேலை செய்வதும் தவறு.உங்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் விஷயங்களை செய்யுங்கள். நான் என் சக குழுவினரை சந்தித்து பிடித்தமான திரைப்படங்களை பார்த்து நொறுக்கு தீனிகளை உண்டோம். ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ திரைப்படத்தை இருமுறை பார்த்தேன்.”
அடுத்ததாக நாசா வை சேர்ந்த ஆனி மெக் க்லெயின் ஆரோக்கியமான முறையில் தனிமையை விரட்ட ஐந்து தகுதிகளை ஒருவர் வளர்த்து கொள்ள வேண்டும் என கூறுகிறார்.
★நீங்கள் நினைப்பதை பிறருக்கு தெளிவாக கூறும் திறன் மற்றும் பிறரது கருத்துக்களை கவனித்து புரிந்து கொள்ளும் திறன்.
★உங்களுக்கென குறிக்கோள்களை அமைத்து பொறுப்பாக நடந்து கொள்ளுதல்.
★உங்கள் உடல்நலம் மற்றும் மனநலம் ஆகிய இரண்டையும் பார்த்து கொள்ள வேண்டும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்திருத்தல் அவசியம்.
★பொருமையாக இருந்து உங்கள் குழுவின் உடல்நலம் மற்றும் மனநலத்தை பார்த்து கொள்ள வேண்டும்.
★கூட்டாக வாழும் போது பொறுமை மிக அவசியம். பிரச்சனைகள் வரும்போது அதனை சமாளிக்க தெரிய வேண்டும்.
விண்வெளி ஆராய்ச்சியாளர் பெக்கி விட்சன் இது குறித்து கூறுகையில்,”நாம் தனிமையில் இருந்து பல உயிர்களை காப்பாற்றுகிறோம் என்ற நேர்மரை எண்ணத்தை வளர்த்து கொள்ள வேண்டும்.
இதற்கு பின்னால் இருக்கும் நோக்கத்தை உணர்ந்து அனைவரும் ஒன்றுபட செயல்பட வேண்டும். இது நாள் வரை நேரம் இல்லாமல் செய்ய முடியாமல் போன வேலைகளை இப்போது செய்து மகிழலாம்.”
Listen to Space Researchers Say No!
COVID-19 has forced all of us to stay home. And we are all trying to prevent Corona from following the social divide. Even though the first two days of being in the house are a lot of fun, it is changing. But one certainly knows how to deal with such loneliness.
They're just astronauts. Astronauts in the International Space Session are the only ones who are left alone. The life of the astronauts has left us wondering how they can live alone for months in a machine designed for them, separated from family, community and friends. It is only when we experience this that we understand its painful sadness.
Astronomers with experience in solitude advise us a few. You can know what it is. Scott Kelly, a NASA-based astronomer, has been at the International Space Station (ISS) for almost a year.
Kelly says it is important to follow a certain routine when alone in such unusual circumstances. He told the New York Times, “It's time to stay home and we have a lot of things to do.
It's wrong to work too much for it. Do the things that make you happy. I met my teammates and watched favorite movies and had a crush. I've seen the Game of Thrones movie twice. ” Next, NASA's Annie McClain says that one must develop five qualities to overcome loneliness.
★ Ability to articulate what you think and to listen to and understand other people's opinions.
★ Set goals for yourself and behave appropriately.
★ You need to take care of both your health and mental health. Knowing your strengths and weaknesses is essential.
★ Be patient and take care of your team's health and mental health.
★ Patience is essential when living together. When it comes to problems, you need to know how to deal with it. Astronaut Becky Witson said, “We need to develop a positive attitude that we are saving many lives from loneliness.
All must work together to realize the purpose behind this. It is now time to do things that could not be done without time. ”
No comments:
Post a Comment
Please Comment