வதந்திகளை தடுக்க விக்கிப்பீடியாவுடன் இந்தியர்கள் புது முயற்சி..இந்தியன்னா சும்மாவா..! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வதந்திகளை தடுக்க விக்கிப்பீடியாவுடன் இந்தியர்கள் புது முயற்சி..இந்தியன்னா சும்மாவா..!

வதந்திகளை தடுக்க விக்கிப்பீடியாவுடன் இந்தியர்கள் புது முயற்சி..இந்தியன்னா சும்மாவா..!

கடந்த இரண்டு வாரங்களாக இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் நாட்டு மக்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சமூக விலகல், தனிநபர் சுகாதாரம் மற்றும் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் போன்றவை மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. 


இதனுடன் சேர்த்து மற்றொன்றௌயும் மக்கள் கவனமாக கையாள வேண்டும். அது தான் வதந்திகள். கொரோனா எதிரொலியை பயன்படுத்தி பலர் மக்களை பதட்டம் அடைய செய்யும் விதமாக வதந்திகளை பரப்பி வருகின்றனர். பரப்பப்படும் தகவல்களில் எது உண்மை எது பொய் அறிவது மிகவும் கடினமான காரியம். இதனால் இதனை ‘மாசிவ் இன்ஃபோடெமிக்” என அழைத்துள்ளது 

உலக சுகாதார நிறுவனம். இதனை சமாளிக்க WHO ‘மித் பஸ்டிங் ஹாட்லைனை’ (Myth Busting Hotline) வெளியிட்டுள்ளது. இதன் மூலம் வதந்திகளை கண்டுபிடிக்க இயலும். 50 மில்லியன் பதிவுகளை 300 ற்கும் மேற்பட்ட மொழிகளில் வழங்கி கொண்டிருக்கும் ஆன்லைன் என்சைக்லோபீடியாவான ‘விக்கிபீடியா’ வும் (Wikipedia) இதற்கு உதவலாம். 


கொரோனா பற்றிய தவறான தகவல்களை தற்போது விக்கிப்பீடியா ‘மிஸ்இன்ஃபர்மேஷன் அபௌட் COVID-19 பான்டமிக்’ (Misinformation about COVID-19 Pandemic) என்ற தலைப்பில் ஒரு பதிவை ஆங்கிலத்தில் எழுதி வருகிறது. இதனை உலகமெங்கும் உள்ள 250 எடிட்டர்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை பதிவு செய்து வருகின்றனர். 

 யாரெல்லாம் COVID-19 குறித்த பதிவுகளை எழுதலாம் என்பதில் எச்சரிக்கையாக உள்ளது விக்கிப்பீடியா. விக்கிப்பீடியாவை அதிகம் படிப்பதில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள தன்னார்வல எடிட்டர்கள் கொரோனா குறித்த சரியான தகவல்களை ஹிந்தி, தமிழ், பெங்காலி மற்றும் கன்னடத்தில் எழுதி வருகின்றனர். 

மருத்துவம் மற்றும் சுகாதாரம் குறித்த தகவல்களை மொழிபெயர்ப்பதற்காகவே விக்கிப்பீடியாவில் ‘ஸ்வஸ்தா’ (Swastha) என்ற திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த தகவல்களை பல்கலை கழகங்களின் உதவியுடன் உள்ளூர் மொழிகளில் மொழி பெயர்த்து தருகின்றனர் இந்திய தன்னார்வல எடிட்டர்கள். மருத்துவம் மற்றும் சுகாதாரம் சம்மந்தமான 35,000 ஆங்கில பதிவுகளை ஸ்வஸ்தா திட்டத்தின் மூலம் மொழி பெயர்த்து வருகிறார்கள். சரியான தகவல்கள் கிடைத்தால் மட்டுமே மக்களால் தற்போது உள்ள சூழ்நிலையில் இருந்து வெளியே வர இயலும். மொழி, தூரம் ஆகிய தடைகளை உடைத்து எரிந்த தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்தினாலே போதுமானது.

Coronavirus prevalence in India has been increasing over the past two weeks. This has brought many restrictions on the people of the country. Social exclusion, personal hygiene and isolation are being pursued by the people. Along with this, there is something else that people need to handle carefully. That's just rumors.

Rumors have been circulating that many people are using the corona echo to make people nervous. It is very difficult to know which is true and which is false. The World Health Organization calls it "Massive Infotemic."

To overcome this, WHO has released the Myth Busting Hotline. This will enable you to spot rumors. Wikipedia's Wikipedia encyclopedia, which provides more than 50 million records in more than 300 languages, can help.

Wikipedia is currently writing a post titled Misinformation about COVID-19 Pandemic in English. 250 editors around the world are recording what they know.


Wikipedia is wary of anyone writing COVID-19. India ranks fifth in terms of reading Wikipedia. Volunteer editors in India are writing accurate information about Corona in Hindi, Tamil, Bengali and Kannada.

Wikipedia's Swastha is a project designed to translate information about medicine and health. Indian voluntary editors translate this information into local languages ​​with the help of universities.

The Swastha program translates 35,000 English records of medical and health care. People can get out of their current situation only if they have the right information. The use of burnt technology is sufficient to break down barriers in language and distance.


No comments:

Post a Comment

Please Comment