கல்வி பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு ஆங்கில அறிவை வளர்க்கும் புரோ செயலி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கல்வி பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு ஆங்கில அறிவை வளர்க்கும் புரோ செயலி

கல்வி பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு ஆங்கில அறிவை வளர்க்கும் புரோ செயலி 

சென்னை, மார்ச் 30 இன்றைய சூழலில் ஆங்கில அறிவு என்பது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்துவதற்காக எல்சா நிறுவனம் புதிய செயலியை மூன்று மாதத்திற்கு இலவசமாக வழங்கி உள்ளது.


கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி பாதிக்கபட்டுள்ள நிலையில் மாண வர்கள் பயன் பெற எல்சா நிறுவனம் ஆங்கில அறிவை மேம்படுத்தும் செயலியை இலவச மாக வழங்க உள்ளது. எல்சா ப்ரோ என்ற செயலி ஆங்கில மொழி கற்பவர்களுக்கு அவர்களின் ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்த உதவும் வகையில் பேச்சு அங்கீகார தொழில் நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது.




3 முதல் 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்கள் வரை அனைத்து மாணவர் களுக்கும் இலவச எல்எஸ்ஏ புரோ செயலியை அறிவித்துள்ளது.எல்சாப்ரோ 1600+ ஆங்கில பாடங் களையும், ஆங்கிலத்தில் உள்ள அனைத்து ஒலிகளையும் உள்ளடக்கிய சுருக்கமான உச்சரிப்பு பயிற்சி பாடத்திட்டத்தையும் வழங்குகிறது.
இது குறித்து எல்சா இணை நிறுவுனர் வு வான் கூறுகையில், கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை விடப் பட்டுள்ள இந்த வேளையில் மாணவர்களுக்கு உதவி செய்வது அவசிய மாகும். எல்சா ஸ்பீக் செயலின்மூலம் மாணவர்கள் தங்களின் ஆங்கில அறிவையும் சரியான உச்சரிப்பையும் வளர்த்து கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment

Please Comment