`நீங்கள் தூங்க வேண்டும் என்று நினைத்தால், இந்தக் கருவி உதவுமாம்' - டெக் சுவாரஸ்யம்!
மனதில் தோன்றும் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தினமும் வெவ்வேறு மனநிலையில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் பலருக்கு, `நம் மனநிலையைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒரு சாதனம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்' எனச் சிலருக்குத் தோன்றியிருக்கலாம்.
இப்போது உண்மையாகவே நம் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கட்டுப்படுத்தவும்,திசை மாற்றவும் புதிய சாதனத்தை வடிவமைத்துள்ளனர்.இந்தச் சாதனம் தலையில் அல்லது கழுத்தில் அணிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நீங்கள் என்ன விதமான மனநிலையில் இருக்க விரும்புகிறீர்களோ அதற்கேற்றவாறு இந்தச் சாதனத்தில் பதிவு செய்து உங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ளலாம்.
தூங்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா, இதைக் கொண்டு தூக்கத்திற்கான மனநிலையை உண்டாக்க முடியும். விழிப்புடன் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த விரும்புகிறீர்களா, அதையும் செய்து கொள்ளலாம்.
இப்படி எந்தவிதமாக வேண்டுமானாலும் நம் மனநிலையை மாற்றிக்கொள்ளலாம்.`ஹப்பீ' (Hapbee) என்ற நிறுவனம்தான் இந்தச் சாதனத்தை வடிவமைத்துள்ளது. சரி, எப்படி நம் மனநிலையை ஒரு சாதனத்தைக்கொண்டு மாற்றமுடியும் என்ற கேள்வி எழும்.
அந்த நிறுவனம் தெரிவித்த வரையில் காப்புரிமை பெற்ற எலக்ட்ரோ மின்காந்த அதிர்வெண்களை வெளியிடும் தொழில்நுட்பம் ஒன்றைப் பயன்படுத்தித்தான் இந்தச் சாதனத்தை வடிவமைத்துள்ளனர்.
அந்தத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள காந்தப்புலமானது 0-22kHz வரையிலான அதிர்வெண்களை வெளியிடுகிறது. குறிப்பிட்ட அளவு மின்காந்த அதிர்வெண்களை வெளியிடுவதன் மூலம் நாம் நம் மனதிற்குப் பிடித்தமான மனநிலையை மாற்றிக்கொள்ள முடியும்.
இதைத் தவிர வேறு எந்த ரசாயனமும் பயன்படுத்தப்படவில்லை.
Wearable Tech
இந்தச் சாதனத்திற்கான செயலியை நம் மொபைலில் பதிவிறக்கம் செய்துகொண்டு அதன் மூலம் நாம் எந்த மனநிலையில் இருக்க விரும்புகிறோமோ,
அந்த அளவிற்கான மின்காந்த அதிர்வெண் வெளியீட்டைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். கடந்த 15 வருடங்களாக ஆராய்ச்சிசெய்து இந்தச் சாதனத்தை வடிவமைத்துள்ளதாக ஹப்பீ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தாண்டு, மே மாதம் இது விற்பனைக்கு வரக்கூடும். ஆனால், விலையும் தாறுமாறுதான், ஒரு சாதனத்தின் விலை அமெரிக்க மதிப்பில் 359 டாலர். இந்திய மதிப்பில் சுமார் ரூ.25,900.
If you think you need to sleep, this tool will help '- Tech Interesting!
For many who are stuck in different moods every day without being able to control their thoughts, some may wonder, 'How much better would it be to have a device to control our moods?' Now we have designed a new device to control and distract the thoughts that come to our minds. You can register on this device and change your mindset according to what kind of mood you want.
Do you want to sleep, this can create a mood for sleep. Do you want to focus on a subject that is vigilant and can do the same. The device is designed by Hapbee. Well, there is the question of how we can change our mindset with a device. The device was designed using a patented electromagnetic frequency release technology. The magnetic field used in that technology emits frequencies from 0-22kHz.
By releasing a certain amount of electromagnetic frequencies, we can change our favorite mood. No chemicals were used other than this. Wearable Tech Download the processor for this device on our mobile so that we can control the electromagnetic frequency output to the level we want to be. The company said it has been researching and designing the device for the past 15 years. This year, it may go on sale in May. But to drop the price, the price of a device is worth US $ 359. 25,900 in Indian value.

No comments:
Post a Comment
Please Comment