ஊரடங்கால் ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்பு கோருகிறேன்
கரோனா வைரஸுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
ஊரடங்கால் ஏற்பட்டுள்ள சிரமத்துக்காக மன்னிப்பு கோருகிறேன். அதேநேரம் கரோனா வைரஸுக்கு எதிரான போரில் நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அகில இந்திய வானொலியில் நேற்று ஒலிபரப்பான ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரத மர் நரேந்திர மோடி பேசியதாவது:
இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் கரோனா வைரஸ் அச் சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. இத னால் 130 கோடி மக்களுக்கு ஏற் பட்டுள்ள சிரமங்களை நன்றாக அறிவேன். இந்த கடினமான முடிவுக் காக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன்.
இது வாழ்வா, சாவா போராட் டம். கரோனா வைரஸுக்கு எதிராக மிகப்பெரிய போரை தொடுத்துள் ளோம். இந்த போரில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும்.
உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் காப் பாற்றவே கடுமையான கட்டுப்பாடு கள் அமல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு என்ற லட்சுமணன் கோட்டை நாம் தாண்டக்கூடாது.
செவிலியர்களுக்கு மரியாதை
கரோனா வைரஸுக்கு எதிராக மனித குலம் ஒன்றிணைந்து போராட வேண்டும். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர் கள் முன்வரிசையில் நின்று போரிட்டு வருகின்றனர்.
இந்த இக்கட்டான நேரத்தில் செவிலியர் களின் தன்னலமற்ற சேவையை போற்றி வணங்குகிறேன்.
உங்கள் நலனில் நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். சுகா தாரத் துறையில் சுமார் 20 ஆயிரம் பேர் சேவையாற்றுகின்றனர். அவர்களுக்காக மத்திய அரசு சார்பில் ரூ.50 லட்சத்துக்கான காப் பீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனாவுக்கு எதி ரான போரில் நீங்கள் தன்னம் பிக்கையுடன் போராட முடியும்.
உண்மையான ஹீரோக்கள்
இப்போதைய சூழ்நிலையில் நமது வீடுகளுக்கு அருகில் இருக்கும் சிறிய மளிகை கடைகாரர்கள், வாகன ஓட்டுநர் கள், வங்கித் துறை ஊழியர்கள், ஊடகத் துறையினர் ஆகியோர்தான் உண்மையான ஹீரோக்கள். இவர் கள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கரோனா வைரஸ் தொற்று இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் சிலர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் அவ மரியாதையாக நடத்தப்படுவ தாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது துரதிருஷ்டவச மானது. அவர்கள் குற்றவாளிகள் கிடையாது. மற்றவர்களுக்கு வைரஸ் தொற்றிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்களிடம் அவமரியாதையாக நடந்து கொள்ளக்கூடாது.
அதற்கு மாறாக அவர்களிடம் அன்பை பரிமாறிக் கொள்ள வேண்டும்.
அதேநேரம் வைரஸ் தொற்றை தடுக்க சமூக விலகலை அனைத்து தரப்பு மக்களும் கண்டிப்புடன் பின் பற்ற வேண்டும். உடலால் தனித் திருந்தாலும் உள்ளத்தால் இணைந் திருக்க வேண்டும். தொலைத் தொடர்பு சேவைகள் மூலம் நமது அன்பை அனைவரியமும் பரிமாறிக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு குடிமகனும் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் செல்லக்கூடாது. வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும்.
ஊரடங்கு உத்தரவால் ஏழை கள் கடுமையாகப் பாதிக்கப்பட் டுள்ளனர். அவர்களிடம் கருணை காட்டுங்கள். யாராவது பசியோடு இருந்தால் அவர்களுக்கு உணவு வழங்குங்கள். இது நமது கலாச்சாரம், பண்பு.
இவ்வாறு அவர் பேசினார்.
(Google Translation)
I apologize for the inconvenience caused by the curfew
Let’s win the battle against the corona virus
Prime Minister Narendra Modi believes in the voice of the mind
I apologize for the inconvenience caused by the curfew. Prime Minister Narendra Modi hopes that we will win the war against the corona virus. Prime Minister Narendra Modi, speaking on All India Radio yesterday's Man Kee Baat Modha (Voice of the Mind), said:
Coronavirus is spreading not only in India but throughout the world. A curfew has been implemented nationwide to control the virus. I am well aware of the difficulties faced by 130 crore people. I apologize publicly for this difficult decision. This is life, sava borat dum. ோம்lom has waged a massive battle against the corona virus. We must win this war.
Strict restrictions have been put in place to protect you and your family. We should not cross the Lakshmanan fort called curfew. Respect for Nurses Humanity must unite and fight against the corona virus. In this, doctors, nurses and health workers are standing in front.
I adore the selfless service of nurses during this difficult time. We are very interested in your welfare. About 20 thousand people are working in the Suga Tarath field. On behalf of the central government, a Rs. That way you can fight your own monster in the battle against Corona.
The real heroes are the small grocers, motorists, banking staff and the media department who are near our homes in the present situation. I congratulate all of them. Some have been isolated on suspicion of coronavirus infection.
But they are being treated with respect. This is unfortunate. They are not guilty. They isolate themselves with the goodwill of not getting infected with others. Don't treat them with contempt.
Instead, you have to exchange love with them.
At the same time, people of all walks of life must resort to social distortion to prevent the virus. Even if the body is separate, it must coexist. All our love is to be exchanged through telecommunication services. Every citizen should feel his responsibility and act.
Do not leave the house unnecessarily. Homes should be safe. Focus on exercise. The poor are severely affected by the curfew. Be kind to them. If someone is hungry, feed them. It is our culture and character. Thus he spoke.

No comments:
Post a Comment
Please Comment