கரோனா பாதிப்பை தடுக்க ‘கபசுர குடிநீர்’ பிரதமரிடம் பரிந்துரை செய்த சித்த மருத்துவர்கள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கரோனா பாதிப்பை தடுக்க ‘கபசுர குடிநீர்’ பிரதமரிடம் பரிந்துரை செய்த சித்த மருத்துவர்கள்

கரோனா பாதிப்பை தடுக்க ‘கபசுர குடிநீர்’ 
பிரதமரிடம் பரிந்துரை செய்த சித்த மருத்துவர்கள்




கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க கபசுரக் குடிநீரை கொடுக்க லாம் என்று சித்த மருத்துவர்கள், பிரதமர் நரேந்திரமோடியிடம் பரிந் துரைத்துள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் தமிழகத்தில் 42 பேர் உட்பட, இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 25 பேர் இறந்துள்ளனர். 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைர ஸுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், தமிழகம் உள் ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


இதுதொடர்பாக அரசு மருத்துவர் களிடம் கேட்டபோது, “கரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அறிகுறிக்கு ஏற்ப, காய்ச்சலுக்கு பாராசிட்டமால், தொண்டைவலிக்கு அசித்ரோ மைசின், இருமலுக்கு டெக்ஸ்ரோ மெத்தோபான், சளிக்கு, நெப்ராக் சிங், அலர்ஜி போன்வற்றுக்கு குளோர்பெனிரமைன் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் மத்திய அரசு பரிந் துரைத்துள்ள ‘ஹைட்ராக்சி குளோ ரோகுயின்’ மாத்திரையும் அளிக் கப்படுகிறது. மருந்தே இல்லாத நிலையில், இந்த கூட்டு மருந்து சிகிச்சை ஓரளவு கை கொடுத் துள்ளது” என்றனர். 

 இதற்கிடையில், ஆங்கில மருத் துவம் தவிர்த்து இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருத்துவ நிபுணர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனை செய்தார். அப்போது ஒவ்வொருவரும் தங்களுடைய சிகிச்சை முறைகளை குறித்து விளக்கினர். அதேபோல், தமிழக சித்த மருத்துவர்கள் கபசுரக்குடி நீரை பரிந்துரை செய்தனர். அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்ட பிரதமர் பரிசீலனை செய்வதாக தெரிவித்தார். 

 பிரதமருடன் ஆலோசனையில் பங்கேற்ற மாநில மருந்து உரிமம் வழங்கும் அதிகாரியும் (இந்திய மருத்துவம்) சித்த மருத்துவருமான எம்.பிச்சையாகுமார், சித்த மருத் துவர் கு.சிவராமன் ஆகியோர் கூறியதாவது: மத்திய அரசு ஒரு மாதத்துக்கு முன்பே நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், நாங்கள் பரிந்துரைத்த மருந்துகளின் அடிப்படையில் நில வேம்பு குடிநீர், கபசுரக் குடிநீர், ஆடாதொடை மணப்பாகு கொடுக் கலாம் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்திருந்தது. 

இதைப் பிரதமரிடம் தெரிவித் தோம். தொடர்ந்து தனிமைப்படுத்தப் பட்டோர், நோய் உறுதி செய்யப் பட்டு அறிகுறிகள் இல்லாதோ ருக்கு கபசுரக் குடிநீரைக் கொடுக் கலாம். சிகிச்சை பெறுவோருக்கு அலோபதி மருந்துடன் கூட்டு மருந் தாக கபசுரக் குடிநீரை கொடுப்பது குறித்து ஆலோசிக்க லாம். கடந்தகாலத்தில் கரோனா வைரஸ் மாதிரி, ஒரு நோய்த் தொற்று ஏற்பட்டபோது கபசுரக் குடிநீர் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறோம். 


தற்போது, தமிழகத்தில் சில ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத் துவமனைகளில் கபசுரக் குடிநீர் கொடுக்கப்பட்டு வருகிறது. இவ் வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் கணேஷிடம் கேட்டபோது, “மத்திய அரசின் ஆலோசனைப் படி தமிழகத்தில் தனிமைப்படுத் தப்பட்டுள்ளோருக்கு நிலவேம்பு குடிநீர் மட்டுமே கொடுக்கப்படு கிறது. இன்னும் கபசுரக் குடிநீர் கொடுக்கத் தொடங்கவில்லை. இந்த நோய்க்கு இந்த மருந்து என்று இன்னும் ஆதாரபூர்வ மாக நிரூபிக்கப்படவில்லை. ஆனா லும், கொடுக்கத் தயாராக இருக்கிறோம்” என்றார்.

Kapusara drinking water to prevent corona damage

Siddha doctors who recommended to the Prime Minister

Siddha doctors have told Prime Minister Narendra Modi that they can give Kapasurak drinking water to prevent coronavirus infection. More than a thousand people in India, including 42 in Tamil Nadu, have died from coronavirus, which threatens the world, killing 25 people.

Various countries are actively engaged in research on the prevention of coronavirus disease that threatens the world. As a result, coronavirus victims are being given joint drug treatment in various states of Tamil Nadu.

When asked by the government doctors, “Chlorpheniramine tablets are given to people suffering from coronavirus as a symptom, parasitic for fever, azithro- mysin for sore throat, dextro methorphan for cough, mucus, nephroxin, allergy. Along with this, the federal government has also been given the Hydroxy Glow Roquein tablet. In the absence of a drug, this combination drug therapy is only a handful. ”


 In the meantime, Prime Minister Narendra Modi consulted with the medical professionals of Indian medical systems Siddha, Ayurveda, Unani and Omopathy, apart from the start of English medicine. Each person explained their treatment. Similarly, Tamil Siddha doctors recommended Kapasurakudi water. The Prime Minister said he would review everything.

 State Medical Licensing Officer (Indian Medicine) and Siddha Medicine MP, Siddhartha Dur Kuvi Sivaraman, who participated in the consultation with the Prime Minister, said: As Kalam The Union Ayush Ministry said.

Let us tell this to the Prime Minister. Those who continue to isolate and have no symptoms of the disease can be given Kapasurak drinking water. Patients can consult Kapasurak drinking water in combination with allopathic medicine. In the past, a coronavirus sample, Kapasurak drinking water, was given in the event of an infection. We have been told that this can prevent the spread of coronavirus.



Currently, Kapasurak is providing drinking water to some primary health centers and government hospitals in Tamil Nadu. They said this. When asked by the Commissioner of Indian Medicine and Ophthalmology, Ganesh, “On the advice of the central government, the Tamil Nadu's isolated people will only be given drinking water. Kapasurak had not yet begun to drink. The drug has not yet been proven to be the cause of this disease. But we are ready to give. ”


No comments:

Post a Comment

Please Comment