உலகிலேயே அதிக நேரம் வேலை செய்யும் பணியாளர்களைக் கொண்ட இந்திய நகரம் எது தெரியுமா?
சுவிட்சர்லாந்து யூனியன் வங்கி' 2018-ம் ஆண்டு விலை மற்றும் வருவாய் அறிக்கையின் அடிப்படையில் உலகெங்கிலும் உள்ள 77 நகரங்களின் வேலை நேரத்தை அளவிட்ட அறிக்கையின் முடிவை வெளியிட்டிருக்கிறது.
அதன்படி, மும்பையில் ஊழியர்கள் சராசரியாக ஒரு வருடத்துக்கு 3,315 மணி நேரம் வேலை செய்கிறார்கள். மும்பையைத் தொடர்ந்து ஹனோய், மெக்ஸிகோ சிட்டி மற்றும் புதுடெல்லி இந்தப் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன.
மேலும், லாகோஸ் (lagos), ரோம் (rome) மற்றும் கோபன்ஹேகன் (copenhagen) போன்ற நகரங்களில் உள்ள ஊழியர்கள் மிகவும் குறைவான நேரமே வேலை செய்கிறார்களாம்.
மும்பையில் வேலை பார்ப்பவர்கள், ஒரு வருடத்துக்கு பத்து நாள்கள் மட்டுமே விடுப்பு எடுக்கிறார்கள் என்கிறது இந்த ஆய்வறிக்கை. ஆனால், ரியாத்தில் ( riyadh) ஒரு வருடத்துக்கு 37 நாள்கள் விடுப்பு எடுக்கிறார்களாம்.
இவர்களே அதிக நாள் விடுப்பு எடுப்பவர்களின் பட்டியலில் முதலிடமும் பிடிக்கிறார்கள்.அதிக நேரம் வேலை - மும்பைசுவிட்சர்லாந்து யூனியன் வங்கிமும்பையில் இருக்கும் ஓர் ஊழியர் ஒரு ஐபோன் வாங்க எண்ணினால் அவர் 900 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்.
மும்பையில் இருக்கும் ஓர் ஊழியர், ஒரு ஐபோன் வாங்க எண்ணினால் அவர் 900 மணிநேரம் வேலை செய்ய வேண்டுமாம். ஓ.இ.சி.டி-யின் (organization for economic cooperation and development) மற்றோர் ஆய்வின்படி, துருக்கி (turkey),
ஒரு வாரத்துக்கு 60 மணி நேரம் மற்றும் அதற்கும் அதிகமாக வேலை செய்யும் ஊழியர்களை அதிக எண்ணிக்கைகளில் கொண்டுள்ளது. வாரத்துக்கு 60 மணிநேரம் வேலை செய்பவர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கையை ஸ்வீடன் கொண்டுள்ளது.
வேலை அழுத்தத்தால் இறப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ள பட்டியலில் ஆசிய நாடுகளே முதன்மையிலுள்ளன. ஜப்பானும் இதில் அடக்கம். ஒர்க்-லைப் (work-life) பேலன்ஸின் முக்கிய அம்சம் எவ்வளவு மணிநேரம் பணியில் செலவழித்திருக்கிறோம் என்பதே.
இதைச் சிறப்பாகக் கடைப்பிடிப்பதில் நோர்டிக் (nortic) நாடுகளே முதலிடத்தைப் பிடித்துள்ளது. நெதர்லாந்து வாரத்துக்கு 50 மணிநேரம் வேலை செய்யும் 0.5 சதவிகித ஊழியர்களைக் கொண்டு முன்னிலை வகித்துள்ளது.
ஒர்ஸ்ட் ஒர்க்-லைப் பேலன்ஸ் (worst work-life balance) பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது துருக்கி, அதைத் தொடர்ந்து மெக்ஸிகோவும் இஸ்ரேலும் உள்ளது.
Do you know which Indian city has the largest workforce in the world?
The Union Bank of Switzerland has released the results of its 2018 Prices and Earnings Report, which measures the working hours of 77 cities around the world. Accordingly, employees in Mumbai work an average of 3,315 hours a year. After Mumbai, Hanoi, Mexico City and New Delhi have made the list. Moreover, employees in cities such as Lagos, Rome, and Copenhagen work very little.
According to the study, workers in Mumbai take leave only ten days a year. But in Riyadh, there are 37 days a year. Overtime Work - If an employee at Mumbai Union Bank, Mumbai, wants to buy an iPhone, he has to work for 900 hours. If an employee in Mumbai wants to buy an iPhone, he must work 900 hours. According to another study by the OECD, Turkey, Turkey employs a large number of employees who work 60 hours and more a week.
Sweden has the minimum number of people working 60 hours per week. Asian countries topped the list of workplace deaths. Japan included. A key aspect of work-life balance is how many hours we have spent working. Nordic countries are the number one priority in this regard. The Netherlands is leading with 0.5 percent of employees who work 50 hours a week. Turkey tops the list of worst work-life balances, followed by Mexico and Israel.
No comments:
Post a Comment
Please Comment