சளி, காய்ச்சல், இருமல் இருந்தால் அரசு ஊழியர்கள் வீட்டிலேயே இருக்கவேண்டும் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சளி, காய்ச்சல், இருமல் இருந்தால் அரசு ஊழியர்கள் வீட்டிலேயே இருக்கவேண்டும்

சளி, காய்ச்சல், இருமல் இருந்தால் அரசு ஊழியர்கள் வீட்டிலேயே இருக்கவேண்டும் 

தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம், அனைத்து அரசு துறை செயலாளர்களுக்கும் அனுப்பிய மிக அவசர கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:- கொரோனா வைரஸ் பரவி வருவதை தடுக்கும் வகையில், தலைமைச் செயலகத்துக்கு வரும் அனைத்து பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் ‘தெர்மல் ஸ்கேனிங்’ என்ற பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். 

இதன்மூலம் கொரோனா வைரஸ் இருப்பதற்கான அறிகுறி கண்டறியப்பட வேண்டும். மேலும், மிக அவசரமான பிரச்சினையாக இருந்தால் மட்டும் கூட்டங்களை அரசு துறை செயலாளர்கள் கூட்ட வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் கூட்டங்களை தவிர்க்கலாம். தினமும் அரசு துறை இயக்குனர்களை தலைமைச் செயலகத்துக்கு வரவழைக்க வேண்டிய அவசியம் இல்லை. சளி, காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சினைகள் இருக்கும் 


பணியாளர்களை, அவர்கள் வீட்டிலேயே இருந்துகொள்ள அறிவுறுத்த வேண்டும். இதன் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவது தடுக்கப்படும். மேலும், அப்படிப்பட்ட பணியாளர்களை டாக்டர்கள் மூலம் சிகிச்சை பெற அறிவுறுத்த வேண்டும். 


 மேலும், அனைத்து பணியாளர்களும் அடிக்கடி தங்கள் கைகளை சோப்பினால் குறைந்தபட்சம் 20 வினாடிகள் கழுவவேண்டும். குளிப்பதற்கு வெந்நீரை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment