புதுப்பொலிவு பெற்ற நெல்லை மாநகராட்சி பள்ளி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

புதுப்பொலிவு பெற்ற நெல்லை மாநகராட்சி பள்ளி

ரஜினி மக்கள் மன்றத்தின் உதவியால் புதுப்பொலிவு பெற்ற நெல்லை மாநகராட்சி பள்ளி 

ரஜினி மக்கள் மன்றத்தினரின் உத வியால், திருநெல்வேலி குறிச்சி பகுதியிலுள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளி புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. அரசுப் பள்ளிகளுக்கு மாணவர் கள் வருகை குறைந்து வரும் சூழலில், அப்பள்ளிகளில் தனியார் பங்களிப்புடன் புனரமைப்பு பணி களை செய்து, மாணவர்களை ஈர்க்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 

அந்த வகையில் குறிச்சியிலுள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில், ரஜினி மக்கள் மன்றத்தின் சார் பில் பல்வேறு பணிகள் செய்யப் பட்டுள்ளன. 1936-ல் தோற்று விக்கப்பட்ட இப்பள்ளியில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 70 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ‘நல்லதை பகிர்வது நம் கடமை’ என்ற வாட்ஸ்அப் குழு மூலம் இப் பள்ளிக்கு ஸ்மார்ட் டிவி வழங்கப் பட்டுள்ளது. 

இந்தக் குழு மூலம் ரஜினி மக்கள் மன்றத்தின் பார்வை இப்பள்ளியின் பக்கம் திரும்பியது. பள்ளியின் முன்பக்கத்தில் ரயில் இன்ஜின், பெட்டிகளை போல் தத்ரூபமாக வண்ணம் பூசப்பட் டுள்ளது. காந்தியடிகள், நேரு, அப்துல் கலாம் போன்ற தலை வர்களின் படங்களும் வரையப்பட் டுள்ளன. மூலிகைத் தோட்டம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளி மாணவி பி.ஆனந்தி என்பவருக்கு செயற் கை கால் வழங்கப்பட்டது. 

இப்பணிகளை நெல்லை ரஜினி மக்கள் மன்ற இணைச் செய லாளர் எஸ்.பாலகிருஷ்ணன் தனது சொந்தச் செலவில் மேற்கொண் டுள்ளார். புதுப்பொலிவு பெற்ற பள் ளியை ஆனந்தி திறந்து வைத்தார். இதுகுறித்து பாலகிருஷ்ணன் கூறும்போது, 

‘‘ரஜினி ரசிகர்களின் மக்கள் சேவையை உணர்த்தும் பொருட்டு மாநகராட்சி பள்ளியை புதுப்பொலிவாக்கியுள்ளோம். இதுபோல், திருநெல்வேலி மாவட் டம் உவரி மற்றும் தருவையிலுள்ள அரசுப் பள்ளிகளில் நலப்பணிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

No comments:

Post a Comment

Please Comment