பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தமிழகம் முதலிடம்: முதல்வர் பழனிசாமி பெருமிதம்
பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் இந்திய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
நாகை மாவட்டத்துக்கான மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா, நாகையை அடுத்த ஒரத்தூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாகைக்கு வருகை தந்த தமிழக முதல்வர், நாகை இ. ஜி. எஸ். கல்விக்குழுமங்களின் சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் கலந்துகொண்டார்.இந்நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் பேசியது: மார்ச் 8-ஆம் தேதி உலக மகளிர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் அதற்கு முந்தைய நாளிலேயே நடைபெறும் இவ்விழாவில் பங்கேற்பதில் பெருமையடைகிறேன். பெண்களின் முன்னேற்றத்துக்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடும் முன்னோடி மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது.
நதிகளுக்கும்,தெய்வங்களுக்கும் பெண்பால் பெயர்களை வைத்து பெண்ணின் பெருமையை போற்றக்கூடியவர்கள் நாம். நமது நாட்டையும் தாய்நாடு என்றுதான் அழைக்கிறோம். ஆண்கள் கல்வியறிவு பெற்றால் அவரின் குடும்பத்துக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.
ஆனால், பெண்கள் கல்வியறிவு பெற்றால் சமுதாயத்தையும், நாட்டையும் உயர்த்தும். மாதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடவேண்டும் என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. பெண்கள் தான் நாட்டின் கண்கள். எனவே தமிழக அரசு பெண்கள் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் எனக் கருதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. த
மிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் உரிய முறையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய மாநிலங்களில், பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் தமிழகம் முதன்மையாக விளங்குகிறது என்றார் எடப்பாடி கே. பழனிசாமி.
இவ்விழாவுக்கு,தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ. எஸ். மணியன் தலைமை வகித்தார். இ. ஜி. எஸ். பிளளை கல்விக் குழுமங்களின் செயலாளர் வி. எஸ். ஜோதிமணி, நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக அமைச்சர்கள் கே.பி. அன்பழகன், சி. விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், ஆர். காமராஜ், கே.சி. கருப்பண்ணன், வெ.சரோஜா மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், பேராசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Tamilnadu tops women's safety: Principal Palanisamy proud
Tamil Nadu Chief Minister Edappadi K. Krishna said that Tamil Nadu is among the first states in India to protect women. Said Palanisamy. The foundation stone ceremony for the Medical College and Hospital of the Naga District was held on Saturday at Nagathoor. The Chief Minister of the State of Naga, Nagai e. G. S. At the event, the Chief Minister of Tamil Nadu spoke: March 8 is celebrated as World Women's Day. I am proud to take part in this event which was held the day before.
Government of Tamil Nadu is implementing various welfare schemes for the advancement of women. Tamil Nadu is also a pioneer state that strives for the advancement of women. We are the ones who admire the pride of a woman with feminine names for rivers and gods. We call our country homeland. Men are educated and useful only to their family and to those who belong to him. But if women become literate, it will raise society and the country. Kavimani Desika Vinayakam Pillai said he should make a monthly birth.
Women are the eyes of the nation. Therefore, the Government of Tamil Nadu is implementing projects that women's progress is the country's progress. In Tamil Nadu, women and girls are being adequately protected. Edappadi K said that in the Indian states, Tamil Nadu is primarily concerned with the protection of women. Palanicami. Minister for Tamil Nadu Handloom and Textile O. S. Maniyan presided over. e. G. S. V. Secretary of Branch Academic Groups S. Jyotimani, Nagai District Collector Praveen B. Nair was the frontrunner. Tamil Nadu Ministers Dearborn, c. Vijayabaskar, R.P. Udayakumar, R. Kamaraj, K.C. Karupannan, V. Saroja and State Department officials, professors and students were present.

No comments:
Post a Comment
Please Comment