'இனி பிளாஸ்டிக் பற்றி கவலை வேண்டாம்'.. 'பிளாஸ்டிக்கை மட்க செய்யும் பூச்சிகள்'.. 'ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு'..! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

'இனி பிளாஸ்டிக் பற்றி கவலை வேண்டாம்'.. 'பிளாஸ்டிக்கை மட்க செய்யும் பூச்சிகள்'.. 'ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு'..!

'இனி பிளாஸ்டிக் பற்றி கவலை வேண்டாம்'.. 'பிளாஸ்டிக்கை மட்க செய்யும் பூச்சிகள்'.. 'ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு'..!


கனடா நாட்டில் உள்ள பிராண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மெழுகுப் புழுக்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வந்தனர். இந்நிலையில் இதன் மூலம் ஒரு புதிய அற்புதம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மெழுகுப் புழுக்களின் வயிற்றில் சில கிருமிகள் உள்ளது.

இந்த கிருமிகள் பிளாஸ்டிக்கை எளிதில் செரிமானம் செய்து, பிறகு அது ஆல்கஹாலாக மாறுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதனால் இந்த மெழுகு புழுக்களின் வயற்றில் உள்ள கிருமிகளை மட்டும் தனியாக எடுத்து ஆய்வு செய்தபோது, 

புழுக்களின் வயிற்றில் இருக்கும்போது தான் அந்த கிருமிகள் அதிகளவில் பிளாஸ்டிக்கை செரிமானம் செய்கின்றன என்பது தெரிய வந்தது. இதனால் ஆராய்ச்சியாளர்கள் மெழுகு புழுக்களுக்கு பிளாஸ்டிக்கை கொடுத்து ஆய்வு செய்து பார்த்தனர். 

மேலும் இந்த புழுக்களை பயன்படுத்தி அதிகளவில் உள்ள பிளாஸ்டிக் குப்பையை ஆல்கஹாலாக மாற்ற முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதனால் தொடர்ந்து இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த செய்தி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வருங்கால தலைமுறையினருக்கு இது பெரிதளவில் உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


'Don't worry about plastic anymore' .. 'Insects making plastic' .. 'Researchers' ..


Scientists at Brandon University in Canada have been researching wax worms. In this case, a new miracle has come to light. There is some germs in the stomach of wax worms. It has been discovered that these germs easily digest the plastic and then turn it into alcohol. So when the wax worms were only examined in the stomach of the worms, it was found that the worms in the stomach of the worms were highly digestible.

Researchers thus gave plasticity to wax worms. Researchers say the use of these worms could turn the excess plastic waste into alcohol. So they continue to study it. This news is receiving worldwide attention. It is also said to be of great help to future generations.

No comments:

Post a Comment

Please Comment