SSC CHSL 2020: எஸ்எஸ்சி தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஓர் அறிவிப்பு!!
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான SSC சார்பில் ஒருங்கிணைந்த மேல்நிலைப் பிரிவு தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் தற்போது அந்தத் தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.
SSC என்னும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான SSC CHSL (ஒருங்கிணைந்த மேல்நிலைப் பிரிவு) தேர்விற்கு விண்ணப்பப் பதிவு கடந்த 2019 டிசம்பர் மாதம் முதல் 2020 ஜனவரி 10ம் தேதி வரையில் நடைபெற்றது.
112ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த SSC CHSL 2020 தேர்வில் தேர்ச்சி பெற்றால் மத்திய அரசுப் பணியில் சேரலாம்.
இதனைத் தொடர்ந்து, வரும் மார்ச் 16ம் தேதி முதல் 27ம் தேதி வரையில் இதற்கான தேர்வுகள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தற்போது விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், தங்களுக்கான SSC CHSL 2020 தேர்வு நுழைவுச் சீட்டினை www.sscsr.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த உடன் அதில் உள்ள விவரங்கள், புகைப்படம், பெயர் உள்ளிட்ட அனைத்தும் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment